தங்கள் குழந்தைகளை மற்றொரு குழந்தைகளுடன் ஒருபோதும் ஒப்பிடக்கூடாது என்று பெற்றோர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். தேர்வு நேரத்தில் ஏற்படும் பயம், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது குறித்து டெல்லியில் பிரதமர் மோடி, மாணவர்களுடன் (Pariksha Pe Charcha 2024) கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி பேசியாவது, பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மற்றொரு குழந்தைகளின் உதாரணங்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இவ்வாறு செய்வதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கும். அதனை […]
போதைப்பொருட்களுக்கு எதிரான சோதனையின் போது பெங்களூருவில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பல்வேறு விதமான போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தியாவில் போதைப்பொருள் கலாச்சாரம் சற்று அதிகரித்து வருவதை காண முடிகிறது. அதற்கு சாட்சியாக முன்பில்லாத அளவுக்கு பல்வேறு இடங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி போதைப்பொருள்களை கைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தும் வருகின்றனர். இந்த போதை வஸ்துக்களை பயன்படுத்துவது பெரும்பாலும் படிக்கும் மாணவர்களும், படித்த இளைஞர்களும் என்பது வேதனைக்குரிய செய்தியாகும். அப்படித்தான் […]
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். அந்தமான் அருகே வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வந்த நிலையில், தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. மேலும் இது வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் பின்னர் அது வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்றும் வானிலை […]
பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநரின் பொறுப்பு. பேருந்து படிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிப்பதால், விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அனைத்து பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநரின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக அனுமதி வழங்க வேண்டும் என மநீம வலியுறுத்தல். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக அனுமதிக்க தமிழக அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,’ வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று, பயிற்சி மருத்துவராகும் வாய்ப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள் பரிதவிக்கும் சூழல் நிலவுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் […]
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று ‘தி ரெட் பலூன்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் சிறாா் திரைப்படங்கள் திரையிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் […]
சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகமத்தை இன்று ஒருநாள் மட்டும் இலவசமாக பார்வையிட அனுமதி. சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டு, ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து, இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பொது மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் காவல் வாத்திய குழுவின் இசை நிகழ்ச்சி, காவல் மோப்ப நாய் […]
மதுரையில் பள்ளிப்புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர். மதுரையில் பள்ளிப்புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1.56 லட்சம் மாணவர்கள், 3,120க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தொழில் முனைதல் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட உள்ளது. பள்ளியிலேயே மாணவர்கள் புத்தாக்க சிந்தனையுடன் உருவாகிட பள்ளிப்புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த 40 புத்தாக்க சிந்தனைகளுக்கு ரூ.25,000 முதல் ரூ. 1 லட்சம் வரை ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மதுரை தவிர்த்து இதர 37 மாவட்டங்களில் இன்று நடைமுறைக்கு வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நேற்று தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி, மாணவர்களுக்கு ஊட்டிவிட்டு மகிழ்ந்தார். இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மதுரை தவிர்த்து இதர 37 மாவட்டங்களில் இன்று நடைமுறைக்கு வருகிறது. 37 மாவட்டங்களிலும் மாவட்ட அமைச்சர்கள், ஆட்சியர்கள், […]
மதுரையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர், அதன் பின் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு, மாணவர்களுக்கும் ஊட்டி விட்டார். மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 1246 தொடக்கபள்ளிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 26 பள்ளிகளை சேர்ந்த 4,136 […]
தனியார் பள்ளிகளில் பயிலும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வரும் நிலையில், இந்த தோற்றால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா தொற்றால் பல மாணவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த நிலையில், தனியார் பள்ளிகளில் பயிலும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்து, அவர்கள் தொடர்ந்து அதே பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்திட […]
நடப்பாண்டில் இருந்து பொதுத்தேர்வு முன்பே உளவியல் ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நேற்று தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று, 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% […]
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் நேற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று நடைபெற்றது. இந்த நிலையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 […]
மாணவர்கள் சாதி அடையாளத்தை குறிப்பிடும் வகையில் வண்ணக் கயிறுகளை கைகளில் கட்டக் கூடாது தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை. தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் சாதியை அடையாளப்படுத்துவதாகவும் அதன் மூலம் பல சாதிக் குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளையின் பொழுதும் மற்றும் விளையாடும் […]
தேர்வு எழுதும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும், எதை செய்ய வேண்டும். தமிழகத்தில் நாளை பொது தேர்வு தொடங்க உள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தேர்வு எழுதும் மாணவர்களைப் பொறுத்தவரை எப்போதுமே ஒரு பதட்டமான சூழல் காணப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு நடைபெறாத நிலையில் தற்போது தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். பயம்,பதற்றத்தை […]
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் தேர்வு எழுதும் போது, முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமில்லை என சுகாதாரத்துறை அறிவிப்பு. தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பொதுத்தேர்வில் போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த […]
சென்னை பூந்தமல்லி பகுதியில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணம் செய்த நிலையில், பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் அவர்கள் பேருந்தை நிறுத்தி மாணவர்களை உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தி அறிவுரை வழங்கினார். சென்னை பூந்தமல்லி பகுதியில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் அவர்கள் பேருந்தை நிறுத்தி மாணவர்களை உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினார். அவர்களிடம் பிளஸ் டூ இரண்டு வருடம், கல்லூரி […]
ஹரியானாவில் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்கள் தடுப்பு செலுத்தவில்லை என்றால் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என்று ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு […]
மதுரையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மதுரை ஆட்சியர் உத்தரவு. மதுரையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், பேருந்துகளின் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்காணிக்க சிறப்பு குழு உருவாக்கபட்டுள்ளதாகவும் மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக […]
கருங்காலிகுப்பம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை போளூர் அருகே கருங்காலிகுப்பம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்துணவில் பல்லி இருந்தது தெரிய வந்ததை அடுத்து உணவு சாப்பிட்ட 19 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.