சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1,417 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 46 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து எம்.ஐ.டிஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில், ஆனோக்கல் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்த 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி இந்தியா முழுவதும், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, சில மாநிலங்களில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த […]
பள்ளிகள் திறந்ததால் தான், மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என கூறுவது, ஒரு தவறான புரிதல். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, செப்.1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை கைக்கொண்டு செயல்பட வேண்டும் என அறிவியுறுத்தப்பட்டது. இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், சில மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பேட்டியளித்துள்ளார். அவர் […]