சென்னை ஐகோர்ட்டில் எம்.புருஷோத்தமன் என்ற வக்கீல் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு அதிக அளவில் வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் வீட்டிற்கு வந்த பின்னரும் வெகுநேரம் படிக்க வேண்டியதாக உள்ளது. இதையடுத்து, ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) பாடத்திட்ட விதிகளை மீறி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் 1 முதல் 3-ம் வகுப்பு வரை 8 பாடங்களைப் போதிக்கின்றன. சின்ன […]