உ.பி-யில் ஆசிரியைக்கு மாணவர் மசாஜ் செய்துவிட்ட வீடியோ வைரலானதையடுத்து, ஆசிரியர் சஸ்பெண்ட். உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள அரசு பள்ளியை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஊர்மிளா சிங் என்பவர் நாற்காலியில் அமர்ந்த வண்ணம், மாணவர் ஒருவர் அவருக்கு மசாஜ் செய்து விடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்த வண்ணம் அவரது கையை மாணவர் ஒருவர் மசாஜ் செய்து விடுகிறார். மற்ற மாணவர்கள், கீழ் அமர்ந்துள்ளனர். இந்த […]
தலித் மாணவரை தூய்மையற்றவர் என்று கூறி, அவருடன் பேச மறுத்துள்ளார் வங்காள பேராசிரியர் ஒருவர். ஒரு வங்காள பேராசிரியர், தன்னுடன் பேசுவதற்கு மறுத்துள்ளதாகவும் தூய்மையற்றவர் என்று அழைத்ததாகவும் மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மாணவரின் பெயர் சோம்நாத் சோ. இந்த மாணவரின் குற்றச்சாட்டு அடிப்படையில், அந்த பேராசிரியர் மீது காவல்துறை புகார் அளித்துள்ளது. சோம்நாத், சாந்திநிகேதன் சியம்பதி பகுதியில் உள்ள டீக்கடையில் பேராசிரியர் சுமித் பாசுவை சந்தித்துள்ளார். […]
சரியாக உட்கார சொன்னதால் ஆசிரியரை இரும்பு கம்பியால் மாணவர் கைது. டெல்லியின் ரன்ஹோலாவில், லலித் என்ற 21 வயது மாணவர், 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இருமுறை 11-ஆம் வகுப்பில் தோல்வியடைந்த நிலையில், மீண்டும் பயின்று வருகிறார். இவரை ஆசிரியர் சரியாக உட்காருமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் ஆசிரியரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கி இது குறித்து விசாரணையை தொடங்கினர். 21 வயதான, லலித் […]
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செருப்பை சிறுவனை கழற்ற சொன்ன விவகாரத்திற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மாணவர் காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளார். நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த மாணவர்களை அமைச்சர் சீனிவாசன் , “டேய் ,வாடா வாடா செருப்பை கழற்றுடா,” என்று அழைக்கவே உடனே அங்கே வந்த இரண்டு மாணவர்களில் ஒருவன் அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டான்.பின்னர் அமைச்சர் […]