தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பிற்கான நிவாரணத் தொகையை அறிவித்தது தமிழ்நாடு அரசு. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், வடகிழக்கு பருவமழையால் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அமைச்சர், வீடுகளுக்கு தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800 நிவாரணம் வழங்கப்படும். மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 வழங்கப்படும் என்றார். மேலும், மழையால் குடிசை பகுதி அளவு இடிந்திருந்தால் ரூ.4,100 வழங்கப்படும் என்றும் மழையால் கான்கிரீட் வீடு […]
ஆவடி பகுதியில் மழைவெள்ளத்தை ஆய்வு செய்த போது, நகுல் என்ற சிறுவன், தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை மழை நிவாரணமாக முதல்வரிடம் அளித்தார். தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மழை பெய்ய தொடங்கிய நாளில் […]
புதுச்சேரியில் மழை, வெள்ளம் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து வெள்ள காட்சியாக உள்ளது. தொடர் மழை காரணமாக விளை நிலங்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் ஹெக்டர் […]