வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டலமாக நிலைகொண்டுள்ள காரணத்தால் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பலவேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இரவு முதல் முதல்வர் எங்களை இயக்கியபடி இருந்தார்.. திமுக அமைச்சர்கள் பேட்டி! சென்னை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் சூழலில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டது. அதே போல நேற்று இரவு முதலே சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சென்னை […]
அரசு சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என மக்கள் மீது மும்முனை தாக்குதல் நடத்தியுள்ளது என வாசன் பேட்டி. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள், சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், அரசு சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என மக்கள் மீது மும்முனை தாக்குதல் நடத்தியுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் சரியாக […]
சென்னையில் மழைநீர் வடியாத பகுதிகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வருகிறார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதி கனமழை பெய்து ஓய்ந்த நிலையில் இன்னும் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து வருகிறது. கனமழை பெய்த காரணத்தால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு மும்முரமாக செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இன்னும் சில இடஙக்ளில் […]
இந்த வருடம் 90 சதவீதம் வெள்ள பாதிப்பு இல்லை. அடுத்த வருடம் 100 சதவீதம் வெள்ள பாதிப்பு இல்லாத சென்னையாக மாறும் . – அமைச்சர் மா.சுப்பிரமணியன். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்ட மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் வடிகால் பணிகள் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் சுமார் 7,100 கோடி ருபாய் செலவில் வெள்ள நீர் தடுப்பு பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்த […]
அனைத்து துறை அமைச்சர்களும் களத்தில் இருக்கிறார்கள். நகராட்சி துறை அமைச்சர், மின்சாரத்துறை, மருத்துவத்துறை அமைச்சர்கள் களத்தில் இருந்து வேலை செய்து வருகின்றனர். – பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன். வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், சென்னையில் முக்கிய சாலைகளில் மழைநீர் புகுந்துள்ளது. இருந்தும், மழைநீர் வடிகால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், […]
மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்புக்கள் ஏற்படுவது வருத்தப்பட வேண்டிய விஷயம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். புதியதலைமுறை செய்தியாளராக பணியாற்றிய முத்துகிருஷ்ணன் என்ற இளைஞர் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். இவரது மரியாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், மழைநீர் வடிகால் விபத்து குறித்து, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் கூறுகையில், மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்புக்கள் ஏற்படுவது வருத்தப்பட வேண்டிய […]
மழை நீர் தேங்கி ஆறு போல காட்சியளிக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது என அன்புமணி ட்வீட். சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் இன்னும் பணிகள் நிறைவடையவில்லை என்றும், இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் இன்னும் பணிகள் நிறைவடையாததால், கடந்த சில நாட்களில் பெய்த மழை நீர் தேங்கி அவை ஆறு […]
மழைநீர் வடிகால் பணிகள் குறைந்தபட்சம் 15 நாள்,அதிகபட்சம் 1 மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மழை அவ்வவ்போது பெய்து வருவதால் வடிகால் பணிகள் தடைபட்டுள்ளது; குறைந்தபட்சம் 15 நாள்,அதிகபட்சம் 1 […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில், வெள்ள தடுப்பு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இதனையடுத்து, இந்த மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில், வெள்ள தடுப்பு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த […]
சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மேயர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பருவமழைக்கு முன்னதாக விரைந்து முடிக்குமாறு தமிழக அரசு ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பருவமழை தொடங்கியுள்ளதால் சிறு பாலங்களுக்கு அடியில் உள்ள கழிவுகளை போர்க்கால அடிப்படையில் அகற்றவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து சென்னை மேயர் கூறுகையில், சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு […]
தமிழகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பருவமழைக்கு முன்னதாக விரைந்து முடிக்குமாறு தமிழக அரசு ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு. சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து, மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பருவமழைக்கு முன்னதாக விரைந்து முடிக்குமாறு தமிழக அரசு ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பருவமழை தொடங்கியுள்ளதால் சிறு பாலங்களுக்கு அடியில் உள்ள கழிவுகளை போர்க்கால அடிப்படையில் அகற்றவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு […]
மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு ₹2.25 லட்சம் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு ₹2.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 20, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, மூலதன நிதி மற்றும் […]
வேப்பேரியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அமைந்துள்ள ராஜா முத்தையா சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து புளியந்தோப்பு, பெரம்பூர் பிரதான சாலை, மயிலாப்பூர், ராமாராவ் தெரு, மந்தைவெளி பேருந்து நிலையம் அருகில் தேவநாதன் தெரு உள்ளிட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் மழைநீர் வடிகால் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். […]
சென்னையில் 144 இடங்களில் ரூ.120 கோடி செலவில் மழைநீர் வடிகால்கள் பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் உத்தரவு. சென்னையில் மழைநீர் தேங்கிய 144 இடங்களில் ரூ.120 கோடி செலவில் 45 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பல்வேறு இடங்கள் கண்டறியப்பட்டு முதல் கட்டமாக 144 இடங்களில் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 45 கி.மீ. நீளத்துக்கு பணிகளை […]