சென்னை மாநகராட்சி, மழைக்காலங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, சென்னையில் அதிகமான மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு மட்டுமல்லாமல், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி, மழைக்காலங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, மழைக்காலம் மற்றும் […]