Election2024: மத்திய பாஜக சில மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சி அமைகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை. தமிழ்நாட்டில் திமுக தலைமையில் கூட்டணியில் காங்கிரஸ் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரமும் பரபரப்பராக நடந்து வருகிறது. சமீபத்தில் ராகுல் காந்தி தமிழகம் வருகை தந்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அந்தவகையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அக்கட்சி […]
Mallikarjun Kharge : தேர்தல் பத்திர முறைகேடுகள் அம்பலமாகியுள்ளதால் பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை வைத்துள்ளார். சமீபத்தில் தேர்தல் பத்திர முறையை உச்சநீதிமன்ற ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், எஸ்பிஐ நேற்று முன்தினம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. Read More – தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வாங்கிய டாப் 10 கட்சிகள்… அதிரவைத்த ரிப்போர்ட்.! இதன்பின், தேர்தல் […]
MK Stalin : தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். Read More – 7.72 லட்சம் மாணவர்கள்., 3,300 தேர்வு […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பணியில் மும்மரம் காட்டி வருகிறது. அதன்படி, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை சமீபத்தில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி […]
இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி டெல்லி பிர்லா மாளிகையில் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய துக்க நாளாக அமைந்தது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கொள்ளப்படுகிறது. அன்றைய தினமே இந்தியாவில் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், மகாத்மா காந்தியின் 76வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. […]
ஜேடியு தலைவரும், பீகார் முதலமைச்சருமான முதல்வர் நிதிஷ் குமார் தனது கூட்டணி கட்சியான லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்ஜேடியுடன் விலகி நாளை பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக பதவியேற்கலாம் என நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவலால் பீகாரில் அரசியல் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது குறித்து (ஆர்ஜேடி) RJD மற்றும் ஜேடியு (JDU) ஆகிய இரு தரப்பிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த செய்தி இந்தியா கூட்டணியை […]
பிப்ரவரி 13-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாடு வருகிறார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பணியில் மும்மரம் காட்டி வருகிறது. இதில் குறிப்பாக, இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கிய வாய்ந்தவையாக பார்க்கப்படுவதால், தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் […]
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் போது சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும்படியாக “ஒரே நாடு ஒரே தேர்தல் ” எனும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவானது ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் உள்ள சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்து வருகிறது . அதே போல அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. […]
இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். பரபரப்பாகும் […]
உத்திர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதியாக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் (Pran Pratishtha) விழா வரும் ஜனவரி 22ஆம் தேதிநடைபெற உள்ளது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பாலிவுட் நடிகர்கள் மாதுரி தீட்சித், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் பங்கேற்க உள்ளனர். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் : ரயில் […]
மத்தியில் கடந்த 2 நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற்று பலமான ஆளும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை வீழ்த்த, காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி , திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் மெகா கூட்டணியை உருவாக்கினர். இந்த இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம், பீகார் தலைநகர் பாட்னாவில் பீகார் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் நடைபெற்றது. அதன் பிறகு ஜூலையில் […]
ஜவர்ஹர்லால் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரல்ட்டு நிறுவனத்தை கடந்த 2008ஆம் ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனம் வாங்கியது. அதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பெயரில் அமலாக்கத்துறை கடந்த வருடம் விசாரணையை தொடங்கியது. இதன் பெயரில் நேற்று நேஷனல் ஹெரால்டு நிறுவனம் மற்றும் யங் நிறுவனத்திற்கு சொந்தமான 751.9 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சோனியா, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் ரூ.751 கோடி சொத்துக்கள் […]
காங்கிரசின் முகமூடி தான் மல்லிகார்ஜுன கார்கே என பாஜக எம்பி சுதான்ஷு திரிவேதி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் அண்மையில் நடைபெற்ற உள்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டுவருகிறார் . அண்மையில் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுதான்ஷு திரிவேதி கூறுகையில், காங்கிரசின் உண்மையான தலைவர் காந்தி குடும்பம் தான். மல்லிகார்ஜுன கார்கே காங்கிரசின் முகம் அல்ல. அவர் காங்கிரசின் முகமூடி என […]
ஆர்எஸ்எஸ், பாஜக. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் தியாகத்தால் தான் தற்போது இந்தியா எழுந்து நிற்கிறது. – பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன். சுதந்திரத்திற்க்கு காங்கிரஸ் நிறைய தியாகங்களை செய்துள்ளது. ஆனால் பாஜக எதுவும் செய்யவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பாஜக மீது விமர்சனம் வைத்து இருந்தார். இதற்கு பாஜக தரப்பில் இருந்த்து பலர் தங்கள் எதிர்ப்பை கூறி வருகின்றனர். தமிழக பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கூறுகையில், ஆர்எஸ்எஸ், பாஜக. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் […]
மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 14 ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவரது 134வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளான இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே […]
நான் வாக்களிக்கும் முறைப்படி காங்கிரஸ் தலைவரானேன். ஆனால், பாஜகவின் தலைவராக ஜே.பி.நட்டா எப்படி நியமிக்கப்பட்டார் என இதுவரை யாருக்கும் தெரியாது – காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சனம். வரும் 12ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் 68 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளததால் பிரதான கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி அங்கு பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். அதே போல காங்கிரஸ் கட்சியும் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. […]
காங்கிரஸ் புதிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘இன்றைய அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு உள்ளது. அந்தவகையில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் -க்கு எதிராக நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிக்கு விசிக உறுதுணையாக இருக்கும்.’ என தெரிவித்தார். மேலும், ‘பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. என கூறினோம். அவரது இத்தனை […]
தலைவர் தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட்ட சசிதரூருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சசிதரூராரை நான் நேரில் சந்தித்து கட்சியை முன்னேற்றப்பாதையில் எடுத்துச்செல்வது குறித்து ஆலோசனை நடத்தினேன். – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று தேர்தல் ரிசல்ட் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை அடுத்து பலரும் தங்கள் வாழ்த்துக்களை மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தெரிவித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று அவரது […]
காங்கிரஸ் கட்சியில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர். ‘என தெரிவித்தார். அவரே கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுப்பார். – காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கருத்து. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 7897 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் 1072 வாக்குகளே பெற்றார். நீண்ட வருடங்களுக்கு பிறகு, நேரு குடும்பத்தை சாரத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது இதுவே […]
காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்கிற நிலவரம் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தற்போது 9500 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சுமார் 7000 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் காங்கிரஸ் […]