MBBS, BDS படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்.11-ஆம் தேதி தொடங்கும் என மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவிப்பு. மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்.11-ஆம் தேதி (AIQ இடங்களுக்கு) தொடங்கும் என மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது. அதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட இடங்களுக்கான கலந்தாய்வு அக்.11-ஆம் தேதி தொடங்குகிறது. அக்.17 முதல் 28-ஆம் தேதிக்குள் மாநிலங்களில் முதற்கட்ட கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம் எனவும் மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி தெரிவித்துள்ளது. மேலும், […]