மருத்துவர்களின் புரியாத கையெழுத்தை , ஸ்கேன் செய்து மருத்துவ குறிப்புகளை பார்த்துக்கொள்ளும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் பிரபல மென்பொருள் தேடல் நிறுவனமான கூகுள் அவ்வப்போது பயனர்களின் வசதிக்காக பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன் படி, தற்போது புதிய வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் கையெழுத்து என்பது பலருக்கும் புரியாத ஒன்றாக இருக்கும். அகில் என்ன எழுதியுள்ளார்கள் என்பதே தெரியாமல் மருந்து கடைக்காரரிடம் கொடுத்து இருப்போம். அவர்கள் அதனை பார்த்து மருந்துகள் கொடுப்பார்கள். […]
வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரண நிதி, அரசு வேலை ஆகியவற்றிற்கான ஆணையை வழங்கினார். மேலும், தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை […]
21 நாள் சிசுவின் வயிற்றில் இருந்து வளர்ச்சி அடையாத எட்டு கருக்களை அகற்றிய மருத்துவர்கள். ஜார்க்கண்ட் ராம்கர் மாவட்டத்தில் கடந்த 10ஆம் தேதி ஒரு குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் வயிற்றில், கட்டி இருப்பதை சிடி ஸ்கேன் செய்த போது மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, சிசு வயிற்றில் இருந்து உடனே கட்டிகளை அகற்ற பரிந்துரைத்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக ராஞ்சி தனியார் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றில் கட்டி அல்ல கரு இருப்பதாக […]
தேவையான மருந்துகளை கோருவதை தவிர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மருந்து இல்லை, எக்ஸ்-ரே கருவி பழுது, கட்டிடம் பாழடைந்துள்ளது என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த இரு மருத்துவர்களை மருத்துவ அமைச்சர் பணியிட மாற்றம் ஏற்க தகுந்ததல்ல என அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார […]
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 53 வயது நபர் தனது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த போது எதோ கண்ணுக்குள் ஈ போன்ற ஒன்று நுழைந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண்ணில் ஈக்களின் லார்வாக்கள் டஜன் கணக்கில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவர்கள் உடனடியாக அவற்றை அகற்றியுள்ளனர். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், இவ்வாறு கண்ணுக்குள் லார்வாக்கள் உருவாகத் தொடங்கி விட்டால் ஏற்படும் கண் எரிச்சல் […]
கர்நாடகாவில் பசவராஜ் என்பவற்றின் வயிற்றில் இருந்து 156 கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பகுதியை சேர்ந்தவர் பசவராஜ். இவர் ஒரு ஆசிரியர் ஆவார். இவருக்கு வயது 50. கடந்த சில நாட்களாக பசவராஜ் கடுமையான அடிவயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் மருத்துவமனைக்கு சென்று சோதித்தபோது அவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் அடைந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தெலுங்கானாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பசவராஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் மூன்று மணி […]
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 53 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளித்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 53 […]