தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலில், விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. பின்னர், அவரது மார்பில் அதிக சளி தேங்கி இருந்ததன் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சைக்காகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். […]
தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை கிராமத்தில் தேமுதிக திருமங்கலம் ஊராட்சி செயலாளர் செல்லத்துரை – மீனா தம்பதியினர் திருமணம் நடைபெற்றது .இந்த திருமண விழாவை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நல சிகிச்சைக்காக […]