தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். தமிழகத்தில் ராமநாதபுரம்,விருதுநகர்,திண்டுக்கல்,நீலகிரி,திருப்பூர், நாமக்கல்,திருவள்ளூர்,நாகப்பட்டினம்,கிருஷ்ணகிரி,அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது.அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க இன்று பிரதமர் மோடி சென்னை வர இருந்த நிலையில்,கொரோனா காரணமாக பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த […]
தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டங்கள் 2014 முதல் 2019 வரை அறிவிக்கப்பட்டவை என்றும்,அதன்பின் 7 ஆண்டுகளாகியும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,மயிலாடுதுறை,தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இல்லை என்பதால் அவற்றில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதி கோரலாம் எனவும்,இது குறித்து மத்திய அரசுடன் தமிழக அரசு பேச்சு நடத்த […]
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இளம் மருத்துவர்களின் எதிர்காலத்தை நிபந்தனைகள் பாதிக்க கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2021-22ஆம் ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50% சேவை ஒதுக்கீட்டில் சேர்வதற்கான தகுதி குறித்த நிபந்தனை இளம் மருத்துவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் 2021-22ஆம் ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில்,அரசு […]