ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடி பேச்சு. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், குஜராத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை காணொளி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு இலக்காக கொண்டு […]
பிரதமர் மோடி, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என தமிழில் கூறி தமிழ்மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், சென்னை செம்மொழி மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் அவர்கள், ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என தமிழில் கூறி […]
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரி 12 ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரி 12 […]
புதிதாக அமைய உள்ள திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். ரூ. 325 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசானது அனுமதி வழங்கியது. இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் இந்த மருத்துவ கல்லூரிக்கு நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில் […]
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட்ட அனைத்து இடங்களும் முழுமையாய் நிறைவு பெற்றதாக சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவு கடந்த மாதம் 5 ம் தேதி வெளியான நிலையில், தமிழகத்தில் உள்ள 3,968 மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான இடங்களுக்கு விண்ணப்பித்து அதன் படி கலந்தாய்வு நடைபெற்று வந்தது. ரேண்டம் எண் அடிப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் இதுவரை அனைத்து மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.