நல்ல மழைக்கு ஈஷா வழங்கியிருக்கும் 8 கோடி மரங்களும் ஒரு காரணம் என காவேரி கூக்குரல் இயக்க விழாவில் தமிழக விவசாய சங்க தலைவர் பாராட்டு. காவேரி கூக்குரல் இயக்கமும் கோவை கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் இணைந்து கோவையைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக இரண்டாம் தவணையாக 1 லட்சம் மரங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் நோக்கம் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடுவதாகும். […]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அண்மையில் 110 விதியின்கீழ் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி,முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா கடந்த ஜூன் 3 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.அந்நாளில் முதல்வர் பல்வேறு உதவிகளையும்,கலைஞர்களுக்கு விருதுகளையும் வழங்கினார். இந்நிலையில்,கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணாநகரில் மாவட்ட கிழக்கு […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் 3 வது நாளாக மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு தற்போது தொடங்கியுள்ளது.இந்த மாநாட்டில் வனத்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில்,சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் முன்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகை அருகே பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நட்டு வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் மரக்கன்றுகளை நட்டு வைப்பது அவசியம்.வப்பரப்பு […]