Mamata Banerjee : நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் ஓர் அதிர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டது.அதில் மேற்கு வங்க மாநில முதல்வரும், திரினாமுக் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி, தலையில் காயத்துடன், முகத்தில் வழிந்தோடும் ரத்தத்தோடு இருக்கும் புகைப்படம் வெளியானது. Read More – மம்தா பானர்ஜி படுகாயம்..! நெற்றியில் கடுமையான ரத்த காயங்களுடன் வெளியான புகைப்படங்களால் அதிர்ச்சி அதில் மம்தாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று மட்டுமே […]
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மம்தா பேனர்ஜி, தாங்கள் இந்தியா கூட்டணியில் இருப்பதாகவும், அனால் மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று இருவேறு மாறுபட்ட கருத்துக்களை கூறினார். இந்தியா கூட்டணி தான்.! ஆனாலும் தனித்து போட்டி.! காங்கிரசுக்கு ‘ஷாக்’ கொடுத்த மம்தா.! மேலும், நாட்டில் அடுத்து என்ன […]
2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் , திமுக, ஆம்ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியில் மே.வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இருந்தது. மம்தா பேனர்ஜி இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டங்களிலும் பங்குபெற்றார். தற்போது வெளியான தகவலின்படி, இன்று மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் உடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்த […]
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தெலுங்கானாவில் 10 ஆண்டுகால சந்திரசேகர ராவ் ஆட்சியை அகற்றி காங்கிரஸ் முதன் முதலாக ஆட்சியை கைப்பற்றியது மட்டுமே அக்கட்சிக்கு ஒரு ஆறுதல் வெற்றியாக மாறியுளளது. மற்றபடி , ஏற்கனவே ஆட்சி செய்த சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜகவிடம் ஆட்சியை இழந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜகவிடம் தோல்வி கண்டுள்ளது. மிசோராமிலும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் வட இந்தியாவில் […]
மேற்கு வங்க மாநிலம், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்ற கூட்டதொடரில் அதானி குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கேள்வி எழுப்புவதற்கு பரிசு பொருட்கள் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு , பாராளுமன்ற ஒழுங்கு விசாரணை குழு அவர் மீது விசாரணை நடத்தியது. மேலும், அவரை எம்பி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரியது. இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில், கொல்கத்தாவில் ஒரு விழாவில் பேசிய மேற்கு வங்க முதல்வர் […]
மேற்கு வாங்க ஆளுங்கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் வீட்டில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் மரணம் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க மாநில ஆளுங்கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புர்பா மேதினிபூர் பகுதி பூத் தலைவர் ராஜ்குமார் மன்னாவின் வீட்டில் நேற்று இரவு குண்டுவெடிப்பு நடந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து இதுவரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இறந்தவாரேல் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதிகளில் ராஜ்பன்ஷிகள் மற்றும் கூர்க்காக்கள் இடையே பிரச்சனைகளை பாஜக ஏற்படுத்துகிறது. இதன் மூலம் பிரிவினைவாதத்தை பாஜக தூண்டுகிறது. – மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி விமர்சனம். குஜராத் சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை ஒட்டி காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக பிரச்சாரம் குறித்து மேற்கு வங்க முதல்வர் […]
சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெறும் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் வந்துள்ளார். மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் அவர்களின் சகோதரர் அவர்களின் 80வது பிறந்தநாள் விழா, சதாபிஷேக விழாவாக இன்று கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வெகு விமர்சியாக நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.. அதே போல சினிமா பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் தற்போது கலந்துகொண்டார். […]
மே.வங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்றார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி. மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் அவர்களின் சகோதரர் அவர்களின் 80வது பிறந்தநாள் விழா, சதாபிஷேக விழாவாக இன்று கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வெகு விமர்சியாக நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்கு நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சென்னை வந்தடைந்தார். நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் மம்தா. இன்று விழா […]
நங்கள் சந்தித்து கொண்டது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. அரசியல் ரீதியில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆகிய இருவரும் கூறி மறுத்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, மம்தா பேனர்ஜி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, திமுக பொருளாளர் டிஆர்.பாலு, […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எனது அரசியல் நண்பர். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. – மம்தா பேனர்ஜி. மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். இன்று அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார். இந்த சந்திப்பு குறித்து அவர் கருத்து தெரிவித்தார். இதுகுறித்து, பேசிய மமதா, ‘ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நான் சந்திக்க உள்ளேன். மு.க.ஸ்டாலின் எனது அரசியல் நண்பர். இந்த சந்திப்பு […]
ஆட்சி அதிகாரம் இல்லாத போது, இதே விசாரணை அமைப்புகள் நாளை உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் காதுகளை பிடித்து வெளியே இழுத்து வரும் நாள் விரைவில் வரும் என மம்தா பேனர்ஜி தனது கருத்தை தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு அமைப்பு சமீபத்தில் நாடு முழுவதும் சோதனை நடத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ நிர்வாகிகள், அலுவலகங்களில் சோதனை செய்து பலரை கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று இந்த சம்பவம் […]
துணை குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் , மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார். குடியரசு தலைவர் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் நாட்டின் புதிய குடியரசு தலைவர் யார் என தெரிந்துவிடும். திரௌபதி முர்மு தான் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என வரும் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா […]
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரிடம் இருந்து 11 சிம்கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. அதன் மூலம் பிகார், ஜார்காண்ட் மாநிலங்கள் மட்டுமின்றி, பங்களாதேஷுக்கும் போன் கால் பேசியுள்ளது அம்பலமாகியுள்ளது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி தங்கியுள்ள வீட்டிற்குள் கடந்த வாரம் ஒரு மர்ம நபர் புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த மர்ம நபரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட அந்த மர்ம நபர் கடந்த வாரம் முதல் போலீஸ் விசாரணை வளையத்திற்குள் […]