மேற்கு வங்கத்தில் நான் ஒரு சீட் கூட காங்கிரசுக்கு கொடுக்கப் போவதில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்தார். இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் என ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து இருந்தார். இதற்கிடையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இன்று மால்டா பகுதியில் பாத யாத்திரையை மேற்கொண்டார். அப்போது மால்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி […]
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கு காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியை உருவாக்கினர். இந்தியா கூட்டணியின் 5 ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், கடைசி ஆலோசனைக் கூட்டம் கடந்த 13-ஆம் தேதி காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்நிலையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவோம் என இன்று மம்தா பானர்ஜி அறிவித்தார். மக்களவை தேர்தலில் […]
கொல்கத்தாவில் கார் விபத்துக்குள்ளானதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பர்த்வானில் இருந்து கொல்கத்தாவுக்கு சாலை வழியாக கொல்கத்தாவுக்கு திரும்பி கொண்டிருந்தபோது திடீரென காரில் பிரேக் போட்டதில் மம்தா பானர்ஜி நெற்றியில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற புகாரில் மகுவா மொய்த்ராவுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நாடாளுமன்ற நன்னடத்தை குழு தலைவர் வினோத் சோங்கர் மக்களவையில் தாக்கல் செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் […]
இன்று சென்னை வரும் முதல்வர் மம்தா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசவுள்ளார். 3-ம் தேதி சென்னையில், மேற்கு வங்க மாநில பொறுப்புஆளுநரான இல.கணேசன் அவர்களின் அண்ணன் எல்.கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மாலை சென்னை வருகிறார். இந்த நிலையில், மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, பாஜக அல்லாத […]
செவ்வாயன்று, மேற்கு வங்கத்தில் TMC அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக பாஜக நடத்திய ‘நபன்னா சலோ’ போராட்ட ஊர்வலத்தின் போது, ஏற்பட்ட வன்முறை மோதல்களில் காவல்துறை அதிகாரிகள், பாஜக ஆதரவாளர்கள் என பலர் காயமடைந்தனர். ‘நபன்னா சோலோ’ பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை வெளியிட்டுள்ள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விரும்பினால் அவர் முதல்வர் நாற்காலியை விட்டு வெளியேற […]
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஓரணியில் திரண்டால் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டிவிடலாம். மேற்கு வங்கத்தில் விரைவில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தை தற்போது ஆரம்பித்துள்ளார் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி கொல்கத்தாவில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசினார். அப்போது, ‘மேற்கு வங்க […]
பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் செல்வி மம்தா பானர்ஜி ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது என அண்ணாமலை ட்வீட். தனியார் பேருந்து உரிமையாளரை மிரட்டிய புகாரில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனும் பாஜக பிரமுகரான சூர்யாவை காவல்துறை கைது செய்துள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து, தன் கார் மீது பேருந்து மோதிய சம்பவத்தில் இழப்பீடு கேட்டு பேருந்தை எடுத்துக்கொண்டு, உரிமையாளரை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கேகே உடலுக்கு கையெடுத்து கும்பிட்டு அஞ்சலி செலுத்தி உள்ளார். பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த பாடகர் கேகேவுக்கு மேற்கு வங்க முதல்வர் அவரை கவுரவிக்கும் வகையில் கொல்கத்தா விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு முழங்க […]
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய மம்தா பானர்ஜி அவர்கள் 2 நாள் பயணமாக தலைநகர் டெல்லிக்கு வருகை தந்துள்ளார். நேற்று டெல்லி வந்த மம்தா பானர்ஜி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமாகிய அபிஷேக் பானர்ஜியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மம்தா பானர்ஜி மற்றும் […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அண்மையில் பேசிய போது, இலங்கையில் பொருளாதார நிலை மோசமாக தான் இருக்கிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதார நிலை இலங்கையை விட மோசமான நிலையில் உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதில் பேசியுள்ள மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் அவர்கள், இலங்கையின் நிலையை விட மேற்குவங்கத்தின் நிலை மிக மோசமாக உள்ளது, அதை கவனித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு வங்கம் தனி நாடாக இருந்திருந்தால், […]
மம்தா பானர்ஜி அவர்கள் பாஜக அல்லாத முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாம் முறையாக ஆட்சியை பிடித்துள்ளார். இந்தநிலையில் மம்தா பானர்ஜி அவர்கள் பாஜக அல்லாத முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் நமது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீது பாஜக பலமுனை தாக்குதல் நடத்தி வருகிறது. பாஜக அரசு தனது அரசியல் எதிரிகளை குறிவைத்து அமலாக்க […]
கடந்த ஆண்டு பெகாசஸ் மென்பொருள் விவகாரம் இந்தியாவில் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.குறிப்பாக, பெகாசஸ் மூலம் ராகுல் காந்தி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்,மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள்,எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் கண்காணிக்கப்பட்டதாகக் கடந்த கூறப்பட்டது.இந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. மத்திய அரசு மறுப்பு: ஆனால்,இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பு எதுவும் நடத்தப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. இதனையடுத்து,இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு […]
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பு 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இந்நிலையில், […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாருக்கிறார். இதனையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘மம்தா பானர்ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். கடவுள் உங்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும், வெற்றியையும், ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தருவார்.’ என பதிவிட்டுள்ளார். A very happy […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூன்று நாள் சுற்றுப்பயணமாக மும்பை செல்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் 3 நாள் சுற்றுப்பயணமாக மும்பை செல்ல உள்ளார். இன்று மேற்கு வங்கத்திலிருந்து மும்பை புறப்பட உள்ளார். இந்த மூன்று நாள் பயணத்தின்போது மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் டிசம்பர் 1-ஆம் தேதி தொழிலதிபர்களை அவர் சந்திக்க உள்ளதாகவும் தகவல் […]
மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுப்ரதா முகர்ஜி நெஞ்சு வலி காரணமாக நேற்றிரவு காலமானார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,மேற்கு வங்க அரசின் கேபினட் அமைச்சராகவும், மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய சுப்ரதா முகர்ஜிக்கு வயது 75.அவருக்கு அக்டோபர் 24 அன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்தும்,நெஞ்சுவலி காரணமாகவும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆஞ்ஜியோப்ளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இந்த நிலையில் ,சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9.22 மணியளவில் அவர் காலமானார். […]
இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்,தற்போது கோவாவில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு கோவா தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோவாவிலும் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று வருகிறார்.இதற்காக,மம்தா கோவாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இதற்கிடையில், மாநிலத்தின் பல தலைவர்கள் மற்றும் பிற மக்கள் திரிணாமுல் கட்சியில் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில்,இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்,தற்போது கோவாவில் திரிணாமுல் காங்கிரஸில் (டிஎம்சி) இணைந்துள்ளார்.18 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அமீருல் இஸ்லாம் மற்றும் ஜாகிர் ஹொசைன் ஆகியோர் தற்போது எம்எல்ஏவாக பதவியேற்றனர். முன்னதாக நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.ஆனால்,நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி தோல்வியுற்றாா்.இருப்பினும், மேற்கு வங்க முதல்வராக அவா் பதவியேற்றாா்.இதனால்,பதவியேற்ற 6 மாதங்களுக்குள் அவா் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்கிடையில்,பவானிபூர் தொகுதி திரிணாமுல் எம்.எல்.ஏ., சோபன்தே தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனையடுத்து,பவானிபூர் தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு,அத்தொகுதியில் முதல்வர் மம்தா […]
இன்று எம்.எல்.ஏ-வாக பதவியேற்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. பவானிபூர் தொகுதி திரிணாமுல் எம்.எல்.ஏ., சோபன்தே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்டாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பிரியங்கா டிப்ரிவால் வேட்பாளராக களம் இறங்கினார். இந்நிலையில், செப்.30-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் […]