குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த டிச.8 ஆம் தேதி குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனிடையே,எம்ஐ-17 ஹெலிகாப்டரின் பிளாக் […]