கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத மழை பெய்ததால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில், ஒரு சில இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. […]
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பாலில், கொழுப்புசத்து அளவு குறைக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இதனை தொடர்ந்து, ஆவின் நிறுவனத்தின் பால் தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் அளித்து இருந்தார். அவரது பதிலில், ஆவின் பால் பாக்கெட்டில் இருந்து இந்த ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை. ஆவின் பாலை குறை கூறிவிட்டு, வடமாநில பால் நிறுவனத்தை தமிழகத்திற்கு கொண்டு வர […]
வெட்டி ஒட்டி சித்தரித்து பொய்யான ஒரு வீடியோவை பாஜகவினர் பரப்புகின்றனர். உண்மையாகவே புழுகுமூட்டைகள் தான். – அமைச்சர் மனோ தங்கராஜ் டிவீட். திமுக பேச்சாளர் சைதை சாதிக் அண்மையில் ஒரு திமுக கூட்டத்தில் பேசுகையில் குஷ்பூ, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் பற்றி சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த திமுக கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் […]
அதிமுக தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி. அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், அதிமுக தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது. ஆணையம் கூறியது உண்மை. குற்றம் செய்யவில்லை என்றால் இவர்களெல்லாம் எதற்காக பயப்படுகிறார்கள். குற்றம் செய்த நெஞ்சம் தான் குறுகுறுக்கும். ஒரு கட்சி எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அரசியல் என்று பேசுவது அர்த்தம் இல்லாதது. திமுக […]
குடிமை பணிகள் மேற்கொள்ளும், அதிகாரிகளை, கட்சியின் விளம்பரத்திற்கு பயன்படுத்த துடிக்கிறது பாஜக என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட். தெலுங்கானா மாநிலத்தில் ரேஷன் கடை ஒன்றில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாததால் மாவட்ட ஆட்சியரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்,’மாலைக்குள் ரேஷன் கடை முன்பு பிரதமர் மோடியின் படத்துடன் பேனர் வைக்க வேண்டும். இல்லையேல் நானே பேனர் […]
அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைப்பு. அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது. இந்தக் குழுவில் தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலாளர், தனியார் நிறுவன தொழில் அதிபர்களும் குழுவில் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகளை பரிந்துரைப்பது போன்றவை இந்த குழுவின் பணிகளாக உள்ளன.