கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரை. கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, கனடா முழுவதும் இந்தியர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில் உஷாராக இருக்குமாறும், தங்களது விவரங்களை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஆணைய தலைவர் அர்சலா வான் டெர் லியான் அவர்கள் இந்தியாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக ஏப்ரல் 24 ஆம் தேதி வருகை தர உள்ளார்கள். இது குறித்த அதிகாரபூர்வ தகவலை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் அர்சலா வான் டெர் லியான் அரசு முறை பயணமாக ஏப்ரல் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இந்தியா வருகிறார் என […]