தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க,போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படவுள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக, அரவிந்தன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அனைத்து பள்ளிகளிலும் போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.அதன்படி,பள்ளி ஆசிரியர்,மாணவர்,பெற்றோரை கொண்டு ஒரு கண்காணிப்பு குழு அமைத்து,தொடர்ச்சியாக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளது.மேலும்,மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக இருக்கிறார்களா? என்ற அறிகுறிகளை கண்டறியும் ஒரு முயற்சியை முன்னெடுக்கிறோம். அதன்பின்னர்,அவ்வாறு உள்ள மாணவர்களுக்கு […]