நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.’ என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். ஐந்து நாள் பயணமாக அங்கு அவர், சர்வதேச நிதி ஆணையம் , உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஜி-20 நிதியமைச்சர்கள் உடன் பேச்சுவார்த்தை, மத்திய வங்கி ஆளுநருடன் பேச்சு வார்த்தை, அடுத்ததாக, ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, […]
தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது.இதில் 41 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில்,நாடு முழுவதும் உள்ள நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 16 எம்பி இடங்களுக்கு நேற்று (ஜூன் 10-ஆம் தேதி) மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,உடனே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. கர்நாடகா: இந்நிலையில்,கர்நாடகாவில் நான்கு இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவை […]
பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார்.மேலும், மத்திய அரசைப் பின்பற்றி,அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தபோது,உள்ளூர் வரியைக் குறைக்காத மாநிலங்களும் வரியை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். பிடிஆர் பதிலடி: இதனையடுத்து,இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
டெல்லி:தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான பதிவுகளை நிர்வகிப்பதற்கு வசதியாக,தனித்த நிலப் பார்சல் அடையாள எண்ணை (ULPIN) ஏற்றுக்கொள்ள மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையைதாக்கல் செய்தார்.அப்போது,அவர் தனது உரையில்,தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான பதிவுகளை நிர்வகிப்பதற்கு வசதியாக,தனித்த நிலப் பார்சல் அடையாள எண்ணை (ULPIN) ஏற்றுக்கொள்ள மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும் என்று கூறினார். மேலும்,நிலப் பதிவேடுகளை எழுத்துப்பெயர்ப்பு […]
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை,சாத்தியமானவைகளை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையாக உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்ட 2022-2023 ஆம் ஆண்டிற்கான மத்திய வரவு-செலவுத் திட்டத்தினை அதிமுக சார்பில் வரவேற்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: அதிமுக சார்பில் வரவேற்பு: “மத்திய நிதி அமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 2022-2023 […]
டெல்லி:நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். 2022-23 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.அப்போது,பல்வேறு துறைகளில் மத்திய அரசு புரிந்த சாதனைகளை அவர் பட்டியலிட்டு பாராட்டினார்.அவரைத் தொடர்ந்து,மக்களவை, மாநிலங்களவையில் மத்திய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில்,2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (காகிதமில்லாத டிஜிட்டல் முறையில்) மத்திய […]