மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள், சென்னை கோயம்பேட்டில், வீடு வீடாக சென்று, கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தமிழகத்தில் சமீப நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. […]
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அறிவித்த பிரதமர் மோடி அவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். பாரதியாரின் 100-வது நினைவு நாளான இன்று,அவரது நினைவைப் போற்றும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாரின் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும்,இந்த அறிவிப்பின் மூலமாக வடஇந்தியாவில் தமிழ் தொடர்பான விரிவான […]