பொருளாதாரத்தில் முன்னிலையில் உள்ள நாடுகள் பணவீக்கம், வேலையின்மை போன்றவற்றால் போராடிக் கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான் என பிரதமர் மோடி பேச்சு. நாடு முழுவதும் 115 இடங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், டெல்லியில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி இந்த நிகழ்வை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 75,000 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று, மத்திய அரசின் துறைகள் இவ்வளவு வேகமாகவும், திறமைவுடையதாகவும் இருக்கிறது […]