மத்திய அரசின் சாதனையை விளக்கி பிரசாரம் பாரதீய ஜனதா முடிவு..!
புதுவை மாநில பாரதீய ஜனதா நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் சங்கர் எம்.எல்.ஏ., துணைத்தலைவர்கள் ஏம்பலம் செல்வம், துரை.கணேசன், பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:– ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மத்திய அரசின் சாதனைகளை பற்றி விளக்க கூட்டம் நடத்துவது. அப்போது 15 வித சாதனைகள் குறித்து பிரதமரின் பேச்சை […]