Amit shah : மத்திய அரசு 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை நேற்று முன்தினம் மத்திய அரசு சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்தது. அதன்படி, நமது நாட்டின் அண்டைய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 2014, டிசம்பருக்கு முன்னர் இந்திய வந்து குடியேறிய (குறைந்த பட்சம் 6 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்து இருக்க வேண்டும்) இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சமணர்கள் ஆகியோருக்கு (இஸ்லாமியர்கள் தவிர) குடியுரிமை வழங்கப்படும் என சட்டம் வழிவகை செய்கிறது. […]
பிரதமர் மோடி கூறியது போல பேஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்பதில் உறுதியாக உள்ளோம் என அமைச்சர் அமித்ஷா பேச்சு. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி, கம்பன் கலையரங்கில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் புதுச்சேரி காவல்துறையில் தேர்வு செய்யப்பட்டோருக்கு பணிநியமன ஆணையை வழங்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி கூறியது போல […]
உக்ரைன் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். உக்ரைனில் இரண்டாவது நாள் இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை ருமேனியா வழியாக இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு […]
சென்னை:புயல் போன்ற ‘ரெட் அலர்ட்’ சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அடிக்கடி வெள்ளம்,பெருமழை போன்ற இயற்கை இடர்பாடுகளினால் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தக்க நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்திட வேண்டும் என்று கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா […]