Tag: மத்தியப் பிரதேசம்

ம.பி.யில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 6 பேர் பலி.. 60க்கும் மேற்பட்டோர் காயம்!

மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா நகரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தூர் மற்றும் போபாலில் இருந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த விபத்தில் பலர் […]

#Madhya Pradesh 4 Min Read
Madhya Pradesh firecracker factory

பள்ளி மாணவி பைக்குள் நாகப்பாம்பு.. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ.!

பள்ளி மாணவியின் பையில் இருந்த நாகப்பாம்பை வெளியேற்றிய ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ.! பாம்புகள் மிகவும் தந்திரமான இடங்களுக்குள் பதுங்கி தங்களை மிகவும் புத்திசாலித்தனமாக மறைத்துக்கொள்ளும் திறன் கொண்டவை. அதனை உறுதிபடுத்தும் வகையில் ஒரு பெரிய நாகப்பாம்பு ஒரு பள்ளி மாணவியின் பைக்குள் சுருண்டு கிடந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூரில் உள்ள படோனி பள்ளியில் உமா ரஜக் என்ற 10 ஆம் வகுப்பு சிறுமி தனது பையில் ஏதோ அசைவதை உணர்ந்ததும், அதை தன் […]

#Madhya Pradesh 3 Min Read
Default Image

தலித் சிறுமியை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்த கிராம மக்கள்

ஷாஜாபூரில் தலித் சிறுமியை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்த கிராம மக்கள். மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது தலித் சிறுமியை பள்ளிக்குச் செல்ல விடாமல் கிராம மக்கள் தடுத்துள்ளனர். பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது சிலர் தன்னை வழி மறித்து தனது பள்ளிப் பையை பறித்துக்கொண்டதாகவும், “கிராமத்தில் எந்தப் பெண்ணும் பள்ளிக்கு செல்ல அனுமதிக்காத நிலையில், உனக்கு எப்படி தைரியம் வந்தது?” என்று கூறியதாகவும் சிறுமி போலீசாரிடம் […]

#Madhya Pradesh 2 Min Read
Default Image

கொரோனா மத்தியில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.351 கோடி மதிப்பில் பள்ளி சீருடை..!

கொரோனா தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நேரத்தில் மத்தியப் பிரதேச அரசு மாணவர்களுக்கு ரூ.351 கோடி மதிப்பிலான சீருடைகளை விநியோகித்ததாக அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்தார். கொரோனா தொற்றுநோயின் போது மாணவர்கள் வீட்டில் படிப்பதாலும், பள்ளிகள் மூடப்பட்டதாலும் சீருடை விநியோகம் குறித்த தகவல்களை காங்கிரஸ் எம்எல்ஏ கேட்டிருந்தார். மேலும், சீருடை வினியோகப் பணிகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ பஞ்சிலால் மேதா கூறினார். இதற்கு பள்ளிக்கல்வித் […]

#Madhya Pradesh 3 Min Read
Default Image

மத்தியப் பிரதேசத்தில் லாரியின் பின்னால் கட்டிவைத்து இழுத்துச் செல்லப்பட்டு இளைஞர் உயிரிழப்பு..!

மத்தியப்பிரதேசத்தில் பழங்குடி இளைஞரை அவரின் கால்களில் கயிற்றை லாரியின் பின்னால் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் கண்ஹையா லால் பில் என்கிற பழங்குடி இளைஞர், வேறு சிலரோடு தன் கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அவரது இருசக்கர வண்டி குஜ்ஜர் சாதியைச் சேர்ந்த ஒருவர் மீது மோதியது. அப்போது அந்த சாதியைச் சேர்ந்தவர்கள் கண்ஹையாவைப் பிடித்து அடித்தனர். மன்னித்து விடுங்கள் என கண்ஹையா லால் […]

#Madhya Pradesh 6 Min Read
Default Image