மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மாநிலத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் […]
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு மாநிலங்களில் இரண்டில் பாஜக முன்னிலையிலும், இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும் உள்ளது. அதன்படி 199 இடங்களைக் கொண்ட ராஜஸ்தானில் சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி பாரதிய ஜனதா 71 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் ஆளும் கட்சியான காங்கிரஸ் 46 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 230 இடங்களைக் கொண்ட மத்தியப்பிரதேசத்தில் பாஜக – 57 இடங்களில் முன்னிலையிலும் […]
மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் இசுலாமியர் என நினைத்து ஜெயின் மதத்தை சேர்ந்த முதியவர் ஒருவரை பாஜக நிர்வாகி கடுமையாக தாக்கியதில் முதியவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தின் சிர்சா கிராமத்தில் வசிக்கும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பவர்லால் ஜெயின் என்ற 65 வயது முதியவர்,ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மதம் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது குடும்பதாருடன் சென்றிந்த நிலையில்,வழி தவறி காணாமல் போய்விட்டார்.இதனையடுத்து,அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் […]
மத்தியப்பிரதேசம்:22 பேர் உயிரிழக்க காரணமான,அஜாக்கிரதையாக பேருந்தை ஓட்டிய ஓட்டுநருக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் சட்டாபூரில் இருந்து பன்னாவுக்கு புறப்பட்ட தனியார் பயணிகள் பேருந்தில் 40 பேர் பயணம் செய்த நிலையில்,ஓட்டுநர் சம்சுதீன் என்பவர் பேருந்தை அதிவேகமாக இயக்கி உள்ளார்.இதனால்,அச்சமடைந்த பயணிகள் மெதுவாக பேருந்தை இயக்குமாறு கூறியும் அவர் கேட்கவில்லை. இதன்காரணமாக,மால்டா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து,ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபதுக்குள்ளனது. இதனால், பேருந்து […]
மத்தியப்பிரதேசத்தில் பேருந்து விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைத்துள்ள பெடலில் இன்று பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தும் லாரியும் ஒன்றோடொன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 25 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தெரிவித்த அப்பகுதி காவல்துறை அதிகாரி சுனில் லாடா, பேருந்தும் லாரியும் எதிர் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது வளைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று […]
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததால்,நர்மதா நதியில் குளிக்க செய்து, ‘தூய்மைப்படுத்துதல்’ சடங்கின் போது அவரது தலைமுடி வெட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பெதுலில் உள்ள ஒரு இளம் பெண்,வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்து கொண்டதால், அவரது குடும்பத்தினரால் ‘தூய்மைப்படுத்துதல்’ சடங்கு செய்ய வற்புறுத்தப்பட்டார். அச்சடங்கின் போது,அவரது தலைமுடி வெட்டப்பட்டு,பின்னர் நதியில் குளிக்க வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது,ஆனால் அந்த […]
மத்தியப்பிரதேசத்தில் உள்ள அலிராஜ்பூரில் மனைவியை சாலையில் வைத்து குச்சியால் அடித்து தாக்கியுள்ளார் கணவர். மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் தனது மனைவி ஒரு பையனுடன் தனியாக இருப்பதைக் கண்ட கணவன், அந்த மனைவியை குச்சியால் அடித்து தாக்கியுள்ளார். அங்குள்ள சோண்ட்வா போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் செப்டம்பர் 10-ஆம் தேதி சாலையின் நடுவில் வைத்துஅடித்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து போலீசார் 6 பேரை கைது செய்தனர். முதலில், அவர் தனது மனைவியை […]
தடுப்பூசி செலுத்துவதில் மத்தியப்பிரதேச மாநிலம் ஒரே நாளில் 24.20 லட்சம் தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது. கொரோனா தொற்று உலக நாடுகளை பெருமளவு பாதித்து வருகிறது. இதிலிருந்து மக்களை காக்க தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த புதன் கிழமையன்று தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனையை படைத்துள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, […]