சர்வதேச கருத்தரங்குகளில் மதுபானம் விநியோகிக்கும் வகையில், சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பரதசகக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் சண்முக சுந்தரம் அவர்கள் ஆஜராகி விளக்கமளித்தார். பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் கொள்கை பரப்பு செயலாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி […]
தமிழகத்தில் மே தினத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,நேற்று ஒரே நாளில் ரூ.252.34 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.54.89 கோடிக்கும்,சென்னையில் ரூ.52.28 கோடிக்கும்,திருச்சியில் ரூ.49.78 கோடிக்கும் மதுப் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளது.மேலும்,சேலம் மண்டலத்தில் ரூ.48.67 கோடி,கோவையில் ரூ.46.72 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 217.96 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.அதன்படி இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில்,டாஸ்மாக் கடைகள் செயல்படாது என […]
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை என நீலகிரி ஆட்சியர் அதிரடி உத்தரவு. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை குறைந்து வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தடுப்பூசியை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முழு அதிகாரத்தை அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பித்தால் மட்டுமே இனி மதுபானம் வழங்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி […]