காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வைரலானதையடுத்து 6 பேர் சஸ்பெண்ட். காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த கல்லூரியை சேர்ந்த மாணவிகள் குளிர்பானத்தில், சாராயத்தை கலந்து அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்த வீடியோ அக்கல்லூரி முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. […]