மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனும், சுவாமியும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்கள். நேற்று சுந்தரேசுவரர் தங்க ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் 4 மாசி வீதிகளில் வலம் வந்தனர். அப்போது திரளான பக்தர்கள் மத்தியில் கோவில் ஓதுவார்கள் சைவ சமய வரலாற்றை பாடினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி […]