வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதாவது, 2011ம் ஆண்டு மதுரை வேலூர் அருகே சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொண்டபோது மு.க.அழகிரி, வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக அதிமுக தெரிவித்தனர். இந்த புகாரை தொடர்ந்து, மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான […]
கடந்த சில வருடங்களுக்கு முன் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி, தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 13பேர் காவல்துரையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. மதுரை உயநீதிமன்ற கிளை, இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த நிலையில், சிபிஐ விசாரணையை முடித்து காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மீது மட்டும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் […]
2011 தேர்தல் சமயத்தில் தாசில்தாரை அடித்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். கடந்த 2011 தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை , மேலூரில், ஒரு கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் திமுக நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அப்போதைய மேலூர் பகுதி தாசில்தாரும், தேர்தல் பொறுப்பாளருமான காளிமுத்து , அதிகாரிகளுடன் அங்கே சென்றார். அப்போது மு.க.அழகிரி தரப்பினருக்கும், தாசில்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, அப்போது […]
தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பள்ளிக்கட்டடங்கள் தொடர்பான வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை. மதுரை உயர்நீதிமன்ற கிளையில், மதுரையை சேர்ந்த செந்தில் முருகன் என்பவர் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல்நிலைப்பள்ளி, அங்காடி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் அதிகமான பள்ளி கட்டங்கள் 40 ஆண்டுகளுக்கும் முன்கூட்டியே கட்டப்பட்ட கட்டிடங்களாக உள்ளது. இதனால் பல பள்ளி கட்டிடங்கள் மோசமான நிலையில், இடிந்து விழும் நிலையில் உள்ளது. மதுரை, கோவை, திருநெல்வேலி, சென்னை உட்பட […]
குலசை தசரா திருவிழாவில் பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பாட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு. ஒவ்வொரு வருடமும் குலசை தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் குலசை தசரா திருவிழா நடைபெறவுள்ள நிலையில், இந்த விழாவில் பாடல்களுக்கு நடனமாடுவதற்கு தடை விதிக்க கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குலசை தசரா திருவிழாவில் பக்தி பாடல்கள் […]
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் மூலம், தகுதியற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது எனஉயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவுறுத்தல். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா, தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் […]