Madurai Chithirai Festival : கள்ளழகர் திருவிழாவில் உயர் அழுத்த மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது . உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா இந்தாண்டு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதன் பிறகு, வரும் ஏப்ரல் 22இல் சித்திரை திருவிழா தேரோட்ட நிகழ்வும், அதனை தொடர்ந்து விழாவின் உச்ச நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் ஏப்ரல் 23இல் நடைபெற இருக்கிறது. கள்ளழகர் ஆற்றில் […]
திண்டுக்கல் மாவட்டம் பழனிமலையில் பாலதண்டாயுதபாணி (முருகன்) கோவில் உள்ளது. இந்த கோயிலில் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு பலகை ஒன்று இருந்தது. அந்த பலகையானது அங்குள்ள அதிகாரிகளால் முன்பு அகற்றப்பட்டது. இதனை அடுத்து பழனியை சேர்ந்த ஒரு நபர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இந்து அறநிலைத்துறை சட்டத்தின் படி, ‘இந்து அல்லாதவர்கள் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் , வேறு மத கடவுளை வணங்குவோர்கள் கோவிலுக்குள் வருவதற்கு தடை […]
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பு ஏற்பட கூடிய வாய்ப்புள்ள இடங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசு தான் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். 2018இல் தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரான காஜா புயலில் தமிழக மீனவர்களின் படகுகள் சேதமனடைந்தது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினர். அவர் கூறுகையில், இயற்கை பேரிடரால் […]
மதுரை ஆதீனமடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை விமான நிலைத்திற்கு அருகே உள்ள மதுரை ஆதீனமடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலமானது புதுச்சேரியை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை […]
ஆன்லைன் விளையாட்டு, லாட்டரி , சூதாட்டம் ஆகியவை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பெற முக்கிய காரணம் பெற்றோர்கள் தான். – உயர்நீதிமன்ற மதுரை கிளை. ஆன்லைன் விளையாட்டு , ஆன்லைன் லாட்டரி பழக்கம், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் விளையாடுகிறார்கள், தற்கான விளம்பரங்களும் அவர்களை ஈர்க்கும் வண்ணம் அதிகரித்து வருகிறது. இதனால் தற்கொலைகள் கூட நடக்கின்றன. என நெல்லையை சேர்ந்த நபர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு பதிவிட்டு இருந்தார். இந்த ஆன்லைன் விளையாட்டு […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் அவர்கள் மீது விடுபட்ட கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மதுரை கீழமை நீதிமன்றத்தில் வழக்கு மனு அளிக்கப்பட்டு இருந்தது. சிபிஐ […]
மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கே செல்போன்களை கொண்டு வருகிறார்கள். மனநல ஆலோசனை பிரிவு முறையாக பள்ளிகளில் செயல்படாதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை என்பது தற்போது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மனநல ஆலோசனையை வழங்க வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும். – உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை. திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயிலுக்கு சொந்தமா 5 ஏக்கர் நிலம், பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது எனவும், அதனை மீட்கும் நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் திருச்சியை சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயிலுக்கு சொந்தமா […]
விஐபிகளுக்கு 10 அடிக்கு ஒரு பாதுகாவலர் செல்கிறார். ஆனால், மாணவிகளுக்கு பாதுகாப்பாக காவலர்களை நிறுத்தலாமே என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மகளிர் கல்லூரியில் மாணவியின் தந்தையை சிலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் விட்ட்டோரியா என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் கல்லூரியிலும் பாதுகாப்பு பணிக்காக காவலர்களை தமிழக அரசு […]
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட யாரும் செல்போன் உபயோகப்படுத்த கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் அனைவரும் செல்போன் உபயோகபடுத்துகிறாரகள். சாமி சிலை முன்பு செல்பி எடுத்து கொள்கிறார்கள். அபிசேகம் செய்வதை வீடியோ எடுத்து யூ-டியூப் சேனல்களில் பதிவிடுகிறார்கள். நாகரீகமாக உடை அணிவதில்லை என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள், மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த […]
கரகாட்டம் ஆடுபவர்கள் நாகரிகமாக உடை அணிய வேண்டும். ஆபாச நடனம் ஆபாச பாடல் ஆகியவை இருக்க கூடாது. – என உயர்நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மதுரை மாவட்டம் மேல்பட்டி கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவில் கரகாட்டம் நடத்த அனுமதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்துள்ளனர். அதன்படி, கரகாட்டம் ஆடுபவர்கள் நாகரிகமாக உடை அணிய வேண்டும். ஆபாச நடனம் ஆபாச […]
பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிகளுக்கு அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது. அனைத்து பள்ளிகளிலும் முறையாக வாகன விதிகளை பின்பற்ற வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. அனைத்து பள்ளிகளும் உயர்நீதிமன்ற உத்தரவின் படி, விதிகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு போடப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு, பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிகளுக்கு அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது. அனைத்து பள்ளிகளிலும் முறையாக வாகன விதிகளை பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை அனைத்து […]
திருச்செந்தூர் கோவிலுக்கு வெளியே கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு விரதம் இருக்க அனுமதி அளித்த தமிழக அரசின் நிலைப்பாடு சரி. கோவிலுக்குள் யாகங்கள் நடத்த அனுமதி இல்லை. – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. வரும் ஞாயிற்று கிழமை கந்தசஷ்டி திருவிழா அனைத்து முருகன் கோவிலிலும் கொண்டாடப்பட உள்ளது. புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் தற்போது இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அவர்களை கோவில் வளாகத்தில் அதாவது கோவிலுக்கு வெளியே பக்தர்கள் சஷ்டி விரதம் இருக்க தமிழக அரசு […]
மதுரை ஆதீனம் ஆன்மீக மடமாக செயல்படுகிறதா.? அல்லது வியாபார நிறுவனமாக செயல்படுகிறதா என மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை ஆதீனத்திற்கு சொத்தான இடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில், மதுரை ஆதீனத்திற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் இருக்கின்றன. அந்த சொத்துக்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஆதீனத்திற்கு சொந்தமான சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் […]
சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள நடடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக குவாரிகள் அமைக்கப்பட்டோ, அல்லது அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிக அளவிலோ மண்வள கனிமங்கள் எடுக்கப்படுவது அவ்வப்போது நடைபெற்று தான் வருகிறது. இதுகுறித்து, உயர்நீதிமன்றம் இன்று தானாக முன்வந்து வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முக்கிய உத்தரவை தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவித்துள்ளது. அதாவது, சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளை […]
ஃப்ரீ ஃபயர் ஆன்லைன் விளையாட்டில் அதிகமாக ரத்தம் தெறிக்கும் காட்சிகள் குழந்தைகளை பாதிக்கும் வகையில் இருக்கின்றது என மதுரை உயர்நீதிமன்ற கிளை வேதனை தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்கு தற்காலத்து இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தான் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை கேட்டு குரல் வலுத்து வருகிறது. இந்நிலையில், இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த ஆன்லைன் விளையாட்டு, குறிப்பாக ஃப்ரீ ஃபயர் விளையாட்டு குறித்து கருத்து […]
அரசு நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை. மீறினால் வழக்கு பதியப்படும். – மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது. அரசு நிலத்தில் எந்தவித அனுமதியுமின்றி மரங்களை வெட்ட கூடாது எனவும் , அதே போல, அதனையும் மீறி மரம் வெட்டினால் வழக்கு போடுங்கள் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி அருகே இருக்கும் குடகனாறு கால்வாயில் உள்ள மரங்களை சிலர் வெட்டி அழித்துவிட்டதாக மதுரை உய்ரநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு […]
உரிய முறைப்படி வசித்து வரும் குடியிருக்கும் வாசிகள் நிலங்களை அவசரகால உத்தரவு என அவர்களின் நிலங்களை கையகப்படுத்துவது தவறு- மதுரை உயர்நீதிமன்றம் கருத்து. தஞ்சாவூரில் விமான படை பயிற்சி தளம் அமைப்பதற்காக, தேவைப்பட்ட அப்பகுதி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக மாற்று இடம் கேட்டு, நிலத்தை கொடுத்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக, அவசரகால தேவை என ஏற்கனவே குடியிருக்கும் குடியிருப்புவாசிகளின் நிலங்களை கையகப்படுத்த உத்தரவு பிறப்பித்து இருந்தார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர். இதனை எதிர்த்து, மதுரை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டிருந்தது. […]
அவரவர் விரும்பும் மதத்தை வழிபட நம் நாட்டில் அனைவரும் உரிமை உண்டு என மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றம் இன்று ஓர் முக்கிய கருத்தை மக்களுக்கு தெரியபடுத்தியது. அதாவது இந்தியா ஓர் மதசார்பற்ற சுதந்திர நாடு. இங்கு யார் எந்த மத கடவுளை வேண்டுமானால் வழிபடலாம். அல்லது கடவுள் இல்லை என்ற கொள்கையோடும் இருக்கலாம். அதனை குறிப்பிட்டு , அவரவர் விரும்பும் மதத்தை வழிபட , நம் நாட்டில் அனைவருக்கும் உரிமை உண்டு. […]
நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளத்தில் பிரபலமான அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒரு யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசுகையில், ‘ நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது’ என அவர் கருத்து கூறியிருந்தார். அவர் கூறிய கருத்துக்கு எதிராக நீதிமன்றம் தானாக முன்வந்து குற்றவியல் வழக்கு பதிவு செய்தது […]