மதுரையில் சூறாவளிக் காற்றுடன் கனமழை..! சுற்றுவட்டார மாவட்டங்களிலும் பரவலாக மழை..!!
மதுரையில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் சாலையோர மரங்கள் சாய்ந்ததுடன், வாகனங்கள் மற்றும் கட்டிடங்களும் சேதமடைந்தன. கோவை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. மதுரை திருநகர் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது, சூறாவளிக் காற்று சுழன்றடித்ததால், சாலையோர மரங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் சாய்ந்தன. இதில் கார்கள், இருசக்கரவாகனங்கள், செல்போன் கோபுரம் உள்ளிட்டவை சேதமடைந்தன. தனியார் பாலர் பள்ளி, சில வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களும் பாதிப்புக்குள்ளாயின. சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து […]