கொடைக்கானலில் இன்று முதல் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கை அமல் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,10 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறப்படும்.இதனால் மதுபானம் வாங்குவோர் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் […]
நீலகிரி மாவட்டத்தில்,சுற்றுலாப் பயணிகள் மது அருந்தி விட்டு காலி மதுப்பாட்டில்களை ஆங்காங்கே வீசுவதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும்,குறிப்பாக வனவிலங்குகளுக்கு காயம் ஏற்படுவதாவும் புகார் எழுந்த நிலையில்,இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,மலைப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகள்,கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை ஏப்ரல் 25க்குள் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்தது.மீறினால்,மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில்,நீலகிரி மாவட்டதில் உள்ள டாஸ்மாக் […]