எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் வாங்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டாஸ்மாக் மதுபானங்களின் கொள்முதல், விற்பனை விவரம் உள்ளிட்டவை குறித்து கேட்டிருந்தார். அதனை வழங்க டாஸ்மாக் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஏற்கனவே உயர்நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவை […]
வெயில் காலத்தில் ஆல்கஹால் பெரிய அளவில் உடல்நலனை பாதிக்கும். அதை அருந்துபவர்கள் கொஞ்ச காலத்திற்கு தியாகம் செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துவத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இல்லை. வெளியே வந்தாலே தண்ணீர் […]
சென்னை:தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது என்றும்,டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி,மாறாக டாஸ்மாக் நிர்வாகம் நேரடியகவோ,மறைமுகமாகவோ பார்களை நடத்த அனுமதியில்லை எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் அவர்கள் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து,டாஸ்மாக் கடை அருகேயுள்ள இடத்தை மேம்படுத்தி […]
கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.675.19 கோடிக்கு மேல் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக பண்டிகை நாட்களில் துணிக்கடைகளில் எப்படி கூட்டம் அலைமோதுகிறதோ, அதே போல மதுபானக்கடைகளிலும் மதுபிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடியும். சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகளவு நடைபெறும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 680 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளதாம். பொங்கலுக்கு மறு தினமான இன்று திருவள்ளுவர் […]
முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி,தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு,ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.மேலும்,மக்கள் வெளியில் வரும் பொது முகக்கவசம் அணிந்து வருமாறும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மது […]
பாரதிய ஜனதாவுக்கு ஒரு கோடி ஓட்டு கொடுங்கள். நாங்கள் வெறும் 70 ரூபாய்க்கு மதுபானம் வழங்குவோம் ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீர ராஜு என தெரிவித்துள்ளார். ஆந்திராவில் விஜயவாடாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீர ராஜு, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் மலிவான மதுபானத்திற்காக மாநிலத்தில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறுகையில், பாரதிய ஜனதாவுக்கு ஒரு கோடி ஓட்டு கொடுங்கள். நாங்கள் […]
ஹரியானா மாநிலத்தில் கலால் சட்டம் மூலம் மதுபானம் அருந்துவோர் வயது வரம்பு குறைத்து அம்மாநில அரசு அறிவிப்பு. ஹரியானா மாநிலத்தில் மதுபானம் மற்றும் பிற போதைப்பொருட்கள் உட்கொள்ள, வாங்க, விற்க சட்டப்பூர்வ வயது 25 லிருந்து 21 ஆக குறைக்கப்பட்டது. பிற மாநிலங்கல் குறைந்த வயது வரம்புகளை நிர்ணயம் செய்திருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஹரியானா கலால் திருத்தம் மசோதா, 2021, ஹரியானா கலால் சட்டம், 1914-இன் 27, 29, 30 […]
திருவள்ளூர் மாவட்டத்தில் மதுபான கடைக்கு வரும் வாடிக்கையாளர் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய உத்தரவு. தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால், அரசு தடுப்பூசி முகாம் நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகமும் தங்கள் சார்பில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடை பணியாளர்களுக்கு மாவட்ட மேலாளர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, […]
அரசு சொல்வதையெல்லாம் கேட்க முடியாது, கூடுதல் விலைக்கு தான் மது விற்பேன் என அடம்பிடித்த மதுக்கடை ஊழியர்கள் பணியிடைநீக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் மது பானத்தை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது. விற்பனை செய்யப்படும் மதுவுக்கு ரசீது வழங்க வேண்டும். இந்த உத்தரவை அனைத்து மதுபான கடைகளும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள முதுகுளத்தூர் எல்லைக்குட்பட்ட திருவரங்கம் டாஸ்மாக் மதுபான […]