மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றதற்காக கடை பொருப்பாளர்களிடம் இருந்து மொத்தமாக 4.61 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. – டாஸ்மாக் நிர்வாகம். தமிழகத்தில் டாஸ்மாக்கின் கீழ் இயங்கும் மதுபான விற்பனை நிலையங்களில் மதுபானங்களில் அச்சிடப்பட்டுள்ள விலையை விட கூடுதலாக விலை வைத்து விற்கப்படுவதாக பல்வேறு குற்றசாட்டுகள் நீண்ட காலமாக எழுந்துள்ளன. தற்போது இதனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, கூடுதல் விலைக்கு டாஸ்மாக் விற்றதற்காக இதுவரையில் 852 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். […]
மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை. தமிழகத்தில் மதுபான கடைகளில் மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரத்திற்குள் மதுபானங்கள் விலைப்பட்டியல் வேண்டும் என்றும் அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர பிற நேரங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட கூடாது எனவும் கூறியுள்ளார். மேலும், சென்னை கொருக்குப்பேட்டையில் மருத்துவமனை, பள்ளி அருகே […]