கடந்த திங்கள்கிழமை டெல்லி அரசு தனது பழைய கலால் வரி மீண்டும் திரும்பும் மற்றும் செப்டம்பர் 1 முதல் அதன் கார்ப்பரேஷன்கள் மூலம் நகரத்தில் மதுக்கடைகளை நடத்தும் என அறிவித்தது. 6 மண்டல உரிமதாரர்கள் தங்கள் உரிமத்தை ஒப்படைத்ததால் டெல்லியில் இன்று 125 மதுக்கடைகள் மூடப்பட்டன. கடந்த திங்கள்கிழமை இரவு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், கடைகளுக்கு சில்லறை மற்றும் மொத்த விற்பனை உரிமங்களை ஒரு மாதத்திற்கு நீட்டித்தது. ஆனால் ஆறு உரிமதாரர்கள் நீட்டிப்பைத் தவிர்த்துவிட்டனர். டெல்லியில் ஜூலை […]
து அருந்தும் கூடங்களை (BAR) மூடவேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மதுக் கடைகளையும் மூடவேண்டும் என்பதற்கான அடித்தளமாக அமையட்டும் என திருமாவளவன் ட்வீட். பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது என்றும்,டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி,மாறாக டாஸ்மாக் நிர்வாகம் நேரடியகவோ,மறைமுகமாகவோ பார்களை நடத்த அனுமதியில்லை எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் அவர்கள் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடை அருகேயுள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது […]
கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.675.19 கோடிக்கு மேல் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக பண்டிகை நாட்களில் துணிக்கடைகளில் எப்படி கூட்டம் அலைமோதுகிறதோ, அதே போல மதுபானக்கடைகளிலும் மதுபிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடியும். சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகளவு நடைபெறும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 680 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளதாம். பொங்கலுக்கு மறு தினமான இன்று திருவள்ளுவர் […]
தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்றும்,நோய்ப் பரவலுக்கு வழிவகுக்கும் மதுக்கடை பார்களையும் மூடுவதற்கு அரசு ஆனையிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி,ஏற்கனவே இதுகுறித்து முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில்,மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்,இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து,தமிழ்நாட்டில் இன்றுடன் ஊரடங்கு […]