இனி சுற்றுசூழல் அனுமதியின்றி மண் எடுக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழில் செய்வோர் சுற்றுசூழல் அனுமதி இல்லாமல் மண் எடுத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. செங்கள் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அரசாணையில் திருத்தம் செய்து மண் எடுப்பதில் விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது. அதன்படி, மண் எடுப்பதற்கான கட்டணத்தை செலுத்தி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மண் எடுக்கலாம். […]