தெற்கு மணிப்பூரில் உள்ள இந்திய-மியான்மர் எல்லைக்கு அருகே அசாம் ரைபிள் படை வீரர் ஒருவர் சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ஏஆர் பட்டாலியன் வளாகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த 6 படை வீரர்களும் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மணிப்பூர் போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்” காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் […]
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இன்று இரண்டாம் கட்டமாக ஒற்றுமை யாத்திரையை,” இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” எனும் பெயரில் மணிப்பூர் மாநிலம் தவுபல் மாவட்டத்தில் இருந்து துவங்கியுள்ளார். கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி துவங்கிய இந்த யாத்திரை தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி.! 67 நாட்கள்.! 6,713 கிமீ பயணம்.! இந்த விழாவில் ராகுல்காந்தி பேசுகையில், நான் 2004 முதல் அரசியலில் உள்ளேன், முதல்முறையாக இந்தியாவில் […]
மணிப்பூரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பயங்கர பதற்றம் நிலவி வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மோரே நகரில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் மற்றும் ஒரு BSF வீரர் காயமடைந்தனர். தற்போது, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்னர். முன்னதாக, நேற்றைய தினம் தௌபல் மாவட்டத்தில் உள்ள லிலாங் சிங்சாவ் பகுதியில் குண்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களில் […]
மணிப்பூர் மாநிலத்தில் புதிய வன்முறை வெடித்ததை அடுத்து, மணிப்பூர் அரசு நேற்று (திங்களன்று) தௌபால் மற்றும் இம்பால் போன்ற மேற்கு மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. நேற்று மாலை தௌபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களது உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பின்னர், அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங், லிலாங்கில் வசிப்பவர்களிடம் […]