பொதுத்தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பொதுத் தேர்வுகள் முறைகேட்டை தடுப்பதற்காக சட்ட மசோதா 2024ஐ பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கால் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான விதிகள் உள்ளன. அதன்படி, தேர்வில் மோசடி செய்வபர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க சட்டம் வழிவகுக்கிறது. மசோதாவை தாக்கல் செய்தபின் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை மக்களவையில் குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதாவை இன்று தாக்கல் செய்ய உள்ளார். இந்த சட்டமானது குற்றவாளிகளை அடையாளம் காணுதல் அவர்கள் பற்றிய அடையாளம் மற்ற தகவல்களை பாதுகாத்தல் போன்றவைகளை நோக்கமாக கொண்டுள்ளது.இப்பொழுது நடைமுறையில் உள்ள இந்த சட்டத்தின் மூலம் குற்றவாளிகள் மற்றும் தண்டனை பெறாத நபர்கள் கைவிரல் பதிவுகள், உள்ளங்கை ரேகைகள் பதிவுகள், கால்தடம் பதிவுகள், புகைப்படங்கள் ஆகிவற்றை நீதிபதியின் உத்தரவு பின்னரே எடுக்க முடியும். ஆனால் இன்று தாக்கல் […]
நவ.29 ஆம் தேதியன்று 3 வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பல மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து,பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் […]