தமிழகம்:மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விரைவில் குணம் பெற்று பணிகளை தொடரவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: ‘‘அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து […]