மத்திய பிரதேசத்தில் பழுதான ரயிலை கைகளால் தள்ளி சென்ற பொதுமக்கள். பொதுவாக நடுவழியில் பழுதாகி நிற்கும் கார், வண்டி மற்றும் பேருந்து போன்ற வாகனங்களை பொதுமக்கள் தள்ளிக் கொண்டு செல்வதுண்டு. ஆனால் ரயில் ஒன்றை கைகளால் தள்ளிய சம்பவத்தை நாம் இதுவரையில் எங்கும் பார்த்திருக்கமாட்டோம். ஆனால், இப்படிப்பட்ட வினோத சம்பவம் ஒன்று மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. ஹர்த் என்ற இடத்தில் ரயிலில் சென்று மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது ரயிலில் தொழில்நுட்ப கோளாறு […]
மதுரையில் 2 நாட்களாக தன் குட்டிகளை ஈன்றெடுக்க முடியாமல் தவித்து வந்த தெரு நாயை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கால்நடை மருத்துவமனையில் சேர்த்த நெகிழ்ச்சியாக நிகழ்வானது அனைவர் மத்தியிலும் மனிதத்தை நினைவு கூர்ந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை வளர்நகர் பகுதியில் கர்ப்பமான நாய் ஒன்று தன் குட்டிகளை ஈன்றெடுக்க முடியாமல் சிரமப்பட்டு அங்கு திரிந்தது. நாயின் வேதனையைக் கண்டு கருணையுள்ளம் கொண்ட சிலர் அதனை மீட்டு மதுரை செல்லூர் மாநகராட்சி தெருநாய் கருத்தடை கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர். […]
கொரோனா வைரஸ் தொற்று பாதிபிலிருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக அரசு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதில், பாரத பிரதமர் கேட்டுக்கொண்டதன்பேரில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடெங்கும் கடைப்பிடிக்க தற்போது கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் தவிர அனைத்துக் கடைகளும், அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்து அடியோடு முடக்கப்பட்டு சாலைகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாநிலம், மாவட்டமும் […]
கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கி வரும் நிலையில் இந்நோய் பரவாமல் தடுக்க பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தனிகவனம் செலுத்தி ஈடுபட்டு உள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் சென்னை உள் பட தமிழ்நாடு முழுவதும் […]
உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் தஞ்சை பெரியகோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டினான். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு மட்டும் அல்லாது இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 23 ஆண்டு கழித்து தற்போது இக்கோவிலுக்கு குடமுழுக்கு விழா கடந்த 5ந்தேதி நடைபெற்றது. இதற்காக கடந்த 1ந்தேதி யாகசாலை பூஜையானது தொடங்கி குடமுழுக்கு நடைபெற்ற நாள் வரை 13 […]
நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள லாங்வா கிராமம் மியான்மர் எல்லையில் உள்ளது. இது இந்தியாவின் கடைகோடி பகுதி. இங்கு வசிக்கும் மக்களில் சிலர் பகலில் இந்தியாவில் உணவு சாப்பிடுகிறார்கள். இரவில் மியான்மரில் தூங்குகிறார்கள். இவர்கள் 2 நாடுகளிலும் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். இங்கு ஒரு கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு வழிபாடு செய்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மியான்மர் நாட்டின் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இங்கு ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு வெளிநாட்டு மாணவர்கள் பலர் படிக்கின்றனர். கடந்த 1970-ம் […]