Tag: மகாராஷ்டிரா முதல்வர்

மகாராஷ்டிரா-கர்நாடக எல்லை பிரச்சனை! இரு மாநில முதல்வர்கள் அமித் ஷா சந்திப்பு.!

மகாராஷ்டிரா-கர்நாடக எல்லை பிரச்சனை குறித்து இரு மாநில முதல்வர்களுடன் அமித் ஷா டெல்லியில் சந்திப்பு நடைபெற்றது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான பெலகாவி எல்லைப் பிரச்சனை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் விவாதித்தார். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையே எல்லைப் பிரச்னை தொடர்பாக இன்று நடைபெற்ற சந்திப்பு நேர்மறையான அணுகுமுறையில் நடைபெற்றது. இந்த எல்லைப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து […]

#Karnataka 5 Min Read
Default Image

மும்பையிலுள்ள அம்பேத்கர் இல்லம் பாரம்பரிய சின்னமாக பாதுகாக்கப்படும்- மகாராஷ்டிர முதல்வர்

மும்பையில் உள்ள அம்பேத்கரின் இல்லம் பாரம்பரிய கட்டிடமாக பாதுகாக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் இல்லம் – ராஜ்க்ருஹா, பாரம்பரிய கட்டிடமாக பாதுகாக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார். அம்பேத்கரின் இல்லத்திற்கு சென்று அம்பேத்கர் மற்றும் மறைந்த அவரது மனைவி ரமாபாய் அம்பேத்கரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர், அம்பேத்கர் நாட்டின் பெருமை என்றும், அவர் வாழ்ந்த இல்லம் வரலாற்று […]

- 3 Min Read
Default Image

மராட்டிய முதல்வராக பொறுப்பேற்கிறார் தேவேந்திர பட்நாவிஸ்…!

பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் இன்று மாலை மகராஷ்டிரா முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்தனர். இதனால்,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க […]

deventhira patnavis 6 Min Read
Default Image

நீட் தேர்வு வியாபம் ஊழல் போன்று மாறிவிட்டது – நானா பட்டொலி

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா பட்டோலி, மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீட் தேர்வு வியாபம் ஊழல் போன்று மாறி இருப்பதால், இந்த தேர்வை மகாராஷ்டிராவில் ரத்து செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. இந்த நீட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த  நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு […]

- 4 Min Read
Default Image

மகாராஷ்டிரா முதல்வர் குடும்பத்துக்கு மாவோயிஸ்ட்கள் கொலை மிரட்டல்..!

மகாராஷ்டிரா மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் கடந்த மாதம் போலீசாருடன் துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 16 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மாவோயிஸ்ட்டுகள் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர். முதல் மந்திரி அலுவலக முகவரிக்கு அடுத்தடுத்து அனுப்பப்பட்ட இரு மிரட்டல் கடிதங்கள் தொடர்பாக உளவுத்துறையினர் விசாரித்து வருவதாகவும், முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத்தாரின் பாதுகாப்பு […]

#BJP 2 Min Read
Default Image