Tag: மகாசிவராத்திரி

சிவராத்திரி அன்று இந்த ஒரு வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும்..!நீங்கள் சிவபெருமானின் அருள் பெறலாம்..!

இன்று மகாசிவராத்திரி என்பதால் சிவபெருமானின் அருள் பெற அவருக்காக விரதம் மேற்கொண்டு, கண் விழித்து பூஜை செய்து இறைவனை வணங்குவர். இன்று சிவபெருமானின் ஆசிர்வாதம் பெற நீங்கள் விரதம் மேற்கொண்டாலும் சரி விரதம் மேற்கொள்ளவில்லை என்றாலும் சரி, கண் விழித்தாலும் சரி கண் விழிக்கவில்லை என்றாலும் சரி, இந்த ஒரு வரி மந்திரம் போதும். சிவபெருமானுக்கு வில்வ இலைகளை போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்போது ‘சம்போ சிவ சம்போ’ என்ற இந்த ஒரு வரி மந்திரத்தை […]

Mahashivratri 2 Min Read
Default Image

இன்று மாலை 6 மணி முதல் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்!

கோவை:ஈஷாவில் இன்று மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம். ருத்ராட்சத்தை வீட்டிலேயே இலவசமாக பெற்று கொள்ளலாம். கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா இன்று (மார்ச் 1-ம் தேதி) ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.இதனிடையே, ஆதியோகியின் அருளை பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000 83000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.ருத்ராட்சத்துடன் சேர்த்து தியானலிங்கத்தில் வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி, ஒருவரின் […]

isha 6 Min Read
Default Image

மீனாட்சி திருக்கல்யாண வைபவம்..ஸ்ரீரங்கத்தில் வெகுச்சிறப்பு.!

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கத்தில் 3 நாட்கள் ஹோமம், மற்றும் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்தபிப்.,21முதல் நாளில் மஹாகணபதி ஹோமம், சங்கீத உபன்யாசம், நாம சங்கீர்த்தனம், திருப்புகழ் ,தேவாரம்,இன்னிசை  என்று பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 2ம் நாளான நேற்று முன்தினம் பூர்ண புஷ்கலா தர்மசாஸ்தா திருக்கல்யாணம், சிவபூஜை, தியான கீர்த்தனைகள், சிவ திவ்யநாமம், ஊஞ்சல் உற்சவம் ஆகியவைகள் வெகுச்சிறப்பாக நடைபெற்றன.பிப்.,24 நாள் 3ம் நாளான நேற்று மீனாட்சி […]

மகாசிவராத்திரி 2 Min Read
Default Image

திருமணத்தடை-குழந்தையின்மையை தவிடு பொடியாக்கி அருளும் அர்த்த-ஜாம வழிபாடு!!

சிவராத்திரி என்பது, பிரளய காலத்தின் போது படைக்கும் பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரம்பொருள் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார் பரமேஸ்வரி.இந்த  பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, ஈஸ்வரனிடம் நான் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார். அந்த நாளை ஆண்டு தோறும் சிவராத்திரியாக […]

sivarathiri2020 5 Min Read
Default Image

நெல்லையப்பர் கோவிலில் சிவராத்திரி விழா.!பக்தர்களுக்கு அறிவிப்பு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் இம்மாதம் 21, 22ஆம் தேதிகளில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் சிவராத்திரி விழாவையொட்டி  நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலின் நடை பிப்.,21ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முழுவதும் நடை திறந்தே இருக்கும்.அன்று இரவு இரவு 10 மணிக்கு முதல் கால சிவராத்திரி சிறப்பு பூஜை  தொடங்கும்.நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் , அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், […]

sivarathiri2020 2 Min Read
Default Image

தென்காளஹஸ்தியில் சிவராத்திரி திருவிழா…கொடியேற்றம் கோலாகலாம்

தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஈத்தாமொழி அருகே  அமைந்துள்ள இலந்தையடித்தட்டு பிரசித்திப்பெற்ற தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கிய நிலையில் காலை 9.30 மணிக்கு மகாசிவராத்தி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.சிவராத்திரி நெருங்குவதால் அனைத்து சிவஸ்தலங்களிலும் சிவராத்திரி வெகுச்சிறப்பாக கொண்டாடப் படுவது குறிப்பிடத்தக்கது.இதனை முன்னிட்டு தற்போது பிரசித்திப்பெற்ற சிவ ஆலங்களிலும் கொடியேற்றம் நடைபெற்று வருகிறது.  

sivarathiri2020 2 Min Read
Default Image