மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா மறைவுக்கு முதல்வர் இரங்கல். மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா(94) வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள்வயிற்றுப் பேத்தியுமான திருமதி. லலிதா பாரதி அம்மையார் அவர்கள் இயற்கை எய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன் என இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். “சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி […]
மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா(94) வயது முதிர்வு காரணமாக காலமானார். மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா(94). இவர் பாரதியாரை போன்று தமிழில் மிகவும் புலமை பெற்றவர். மேலும் கவிதை எழுதுவதிலும் மிகவும் சிறந்தவர் ஆவார். மேலும், பல நூல்களை எழுதிய இவர் இன்று காலை வயது முதிர்வு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுதந்திர வேட்கையினை மக்கள் மத்தியில் தனது இலக்கியம் மூலம் உயிரூட்டிய நம் மகாகவி பாரதியின் சிறு குறு குறிப்பு. 1882ஆம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். தனது பதினோராம் வயதிலேயே கவி பாடும் ஆற்றல் கொண்டதால், பின்னாளில் எட்டயபுரம் மன்னரின் அரசவை கவிஞர் ஆனார். அவர் வாழ்ந்த காலம் தான் சுதந்திரத்திற்கான போராட்டமும், மக்களுக்கு சுதந்திரம் மீதான வேட்கையும் தலைதூக்க ஆரம்பித்த காலம். அப்போது தனது பாடல்கள் மூலம் […]
புகழ்பெற்ற இந்திய கவிஞர், எழுத்தாளர் & சுதந்திர போராட்டவீரர் மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு தினத்தில் நான் அவரை வணங்குகிறேன். இன்று நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார். இதனையடுத்து பாரதியின் 100-வது ஆண்டு நினைவு நாளான இன்று, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் […]
மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் தேதி இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.மேலும்,பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப்போட்டி நடத்தி பாரதி இளம் கவிஞர் விருது வழங்கப்படும் என்றும் 14 முக்கிய அறிவுப்புகளை முதல்வர் வெளியிட்டார். அதன்படி,மகாகவி பாரதியின் நினைவு நாளான இன்று ‘மகாகவி […]
பாரதியாரின் 100 வது நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி,தமிழில் ட்வீட் செய்துள்ளார். மகாகவி பாரதியார் தனது 39-வது வயதில், 1921-ம் ஆண்டு செப்டம்பர் 11- நள்ளிரவு இறந்தார்.இதனையடுத்து,ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11 ஆம் தேதியன்று பாரதியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில்,பாரதியாரின் நினைவை போற்றும் வகையில்,செப்டம்பர் 11 ஆம் தேதி ‘மகாகவி நாளாக’ கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.அதன்படி,இன்று பலரும் அவரது நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில்,பாரதியாரின் […]
கழிவறையில் மகாகவி பாரதியின் புகைப்படம் இடபெற்றுள்ளதற்கு பொதுமக்கள் தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் திருச்சி புத்தூரில் அமைச்சர் திறந்து வைத்த கழிப்பறை கட்டிடத்தில் மகாகவி பாரதியாரின் புகைப்படும் வைக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் புத்தூரில் உள்ளது மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை இதன் அருகே வயலூர் சாலைப் பகுதியில் பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்நிலையில் நாள்தோறும் இங்கு சோமரசன்பேட்டை மற்றும் அல்லித்துறை ஆகிய பகுதிகளுக்குச் செல்ல ஏராளமான பயணிகள் பேருந்துக்காகக் […]
மகாகவி பாரதியாரின் 137வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் இலக்கியவாதி, தமிழாசிரியர், விடுதலை போராட்டவீரர், பத்திரிக்கையாளர் என தமிழுக்கும் தாய் நாட்டிற்கும் பலவகையில் சேவையாற்றியுள்ளார். 1882 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி – இலக்குமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் சுப்பிரமணியன். 1897ஆம் ஆண்டு செல்லம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இளம் வயதிலேயே கவிபாடும் திறன் பெற்றிருந்தார். தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் பல தமிழ் கவிதைகள், இலக்கியங்கள் என பல படைப்புகளை எழுதியுள்ளார். எட்டப்ப நாயக்கர் […]