சென்னை:மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்த நாளான இன்று,தமிழுக்குத் தொண்டு செய்த பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவரும்,கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என அனைத்திலும் தனக்கென்று ஒரு பாதையை வகுத்து முத்திரையைப் படைத்தவரும்,தன் எழுத்துக்கள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை தூண்டியவரும்தான் மகாகவி […]