திருச்சிமாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி கொம்பன் ஜெகன். இவர் மீது 26 மாவட்டங்களில், 11 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஜெகனை பிடிப்பதற்காக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் ரவுடி ஜெகனை தேடி வந்தனர். இதனையடுத்து, ரவுடி ஜெகன் சனமங்கலம் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், ஜெகனை பிடிப்பதற்காக போலீசார் சென்றுள்ளனர். திருச்சியில் பிரபல ரவுடி கொம்பன் […]
செங்கல்பட்டு இரட்டை கொலை விவகாரத்தில், காவல்துறையினரின் என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் உயிரிழப்பு. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடைக்கு கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் என்பவர் டீ குடிக்க வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் சரமாரியாக தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். அப்பு கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின் தப்பி […]