போலி பல்கலைக்கழக சான்றிதழ்கள், பள்ளி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறுபோலி சான்றிதழ் தொடர்பாக வழக்குகள் தொடர்ந்து பதியப்பட்டு வந்தான. இந்த வழக்கு விசாரணையில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் குறித்து இன்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். பற்களை பிடுங்கிய விவகாரம்.! பல்வீர் சிங்கிற்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமீன்.! அப்போது, திவாகர், ரோகேஷ் எனும் இருவர் இதில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படுகின்றனர். அவர்கள் வெவ்வேறு பெயர்களில் […]
பெங்களூருவில் ஒரு தொலைதூர கல்வி நிலையத்தில் போலியாக முதுகலை, பிஎச்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. போலி சான்றிதழ் , போலி பட்டம் என்று உலா வந்து, தற்போது புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் பெயர்களில் முதுகலை பட்டம், பி. எச்டி பட்டம் வரையில் வந்துவிட்டது. அதுவும் தொலைதூர கல்வி வழங்கும் ஒரு கல்வி நிலையத்தில் தான் இந்த மோசடிகள் அரங்கேறியுள்ளன. அங்கு அண்மையில் அரசு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1000 போலி சான்றிதழ்கள், முத்திரைகள் ஆகியவை கண்டறியப்பட்டன. […]
தஞ்சை பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் அளித்த 7 பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் பரிந்துரை. தஞ்சை பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வுக்காக 7 ஊழியர்கள் போலி சான்றிதழ் தந்தது கண்டுபிக்கப்பட்டுள்ளது. தட்டச்சு தேர்வு எழுதி தேர்வானதாக போலிச்சான்று தந்து பதவி உயர்வு பெற்ற தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஊழியர்கள் 7 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ( DoTE ) பரிந்துரை செய்துள்ளது. பதவி உயர்வு பெற […]
தமிழகத்திற்கு வந்த வடமாநிலத்தவர்கள் சிலர் ஒன்றிய அரசு நிறுவனங்களில் போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. தமிழக தேர்வுத் துறையின் சான்றிதழ் சரிபார்ப்பில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது. 200க்கும் அதிகமான வடமாநிலத்தவர்கள் இவ்வாறு போலி சான்றிதழ் கொடுத்து அஞ்சல் ஊழியர், இந்தியன் ஆயில் நிறுவனம், சிஆர்பிஎஃப் ஆகிய பணியில் சேர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொரோனா தடுப்புபூசி போட்டதாக போலி சான்றிதழை தரும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில இடங்களில் தடுப்பூசி போடாமலேயே, 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டு விட்டதாக வரும் சான்றிதழால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து, மக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில், கொரோனா தடுப்புபூசி […]