திருப்பதி அடுத்த ஸ்ரீவாரிமெட்டு பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் 3 குழுக்களாகப் பிரிந்து கல்யாணி அணைக்கட்டு மற்றும் அதன் அருகில் உள்ள லோடிங் பாயிண்ட், சந்திரகிரி புறவழிச்சாலை ஆகிய இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது புற வழிச்சாலையில் இருந்து சந்தேகப்படும்படியாக ஒரு கார் செல்வதைக் கண்டனர். அதன் எண்ணை உடனடியாக மற்ற குழுவினரிடம் தெரிவித்தனர். அந்த காரில் லோடிங் பாயிண்டில் செம்மரக் கட்டைகளை ஏற்றிச் செல்வதை கவனித்தனர். இதையடுத்து காரை மடக்கிப் பிடிக்க […]