போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கடந்த மாதம் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். போக்குவரத்து தொழிலாளர் ஊதியம் பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி இருக்க வேண்டும் ஆனால் இன்னும் ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை குறித்து அரசு பேசவில்லை. அதே நேரத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலி பணியிடங்கள் நிரப்புவதில் ஒப்பந்தம் செய்யக்கூடிய பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி இருந்தனர். இன்று சென்னையில் தொழிலாளர் […]
நேற்று முன்தினம் பாராளுமன்ற பார்வையாளர்கள் கேலரியில் இருந்த ஒரு பெண் , ஒரு ஆண் என இரு நபர்கள் மக்களவையில் பாதுக்காப்பு அரண் மீறி உள்ளே நுழைந்த சம்பவம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]
திமுக அரசை கண்டித்து நாளை நடைபெறவிருந்த போராட்டம் 14 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்படுவதாக ஈபிஎஸ் அறிவிப்பு. திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் நாளை போராட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்காலர் பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மழை காரணமாக 14 மாவட்டங்களில் இந்த போராட்டம் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கடலூர், தஞ்சை, விருதுநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, […]
திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. கோவையில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஈபிஎஸ், ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது ஒரு முதலமைச்சர் எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்பது இந்த 18 மாத ஆட்சியில் காட்டியுள்ளனர். அதிமுகவை பற்றி […]
கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம். கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து இன்று கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்குகிறார். காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் போராட்டம் தொடங்குகிறது. இந்த போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு போராட்டத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். தமிழகத்தில் ஆட்சி […]
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் காவல்துறையினர் விரைவான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சியில், கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், இன்று சென்னை மயிலாப்பூர் டிஜிபு அலுவலகம் முன்பு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் […]
மாணவி பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்தால் தான் மாணவியின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் போராட்டம். கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு (17) பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்த நிலையில், தவறான சிகிச்சை காரணமாக அறுவை சிகிச்சைக்கு பின் பிரியாவுக்கு ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டதால் வலது கால் அகற்றப்பட்டது. இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை […]
அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ஆளும் திமுகவினர் தொடர்ந்து பெண்களை இழிவாக பேசுவதை கண்டித்து, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களும் கலந்து கொண்டார். இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மகளிர் அணி உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட அண்ணாமலை மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு […]
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் அண்ணாமலை கைது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ஆளும் திமுகவினர் தொடர்ந்து பெண்களை இழிவாக பேசுவதை கண்டித்து, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களும் கலந்து கொண்டார். இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மகளிர் அணி உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளில் எப்படி மாணவர்கள் நன்றாக படிப்பார்கள்? என TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் பேட்டி. TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறுநியமன போட்டித் தேர்வு என்ற அரசாணையை நீக்க கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய […]
ஊதிய உயர்வுக்காகவும் நியாயமான கோரிக்கைக்காகவும் அரசு அரசு மருத்துவர்களை போராட வைப்பது தமிழக அரசுக்கு அவமானமாக தெரியவில்லையா? என டிடிவி தினகரன் ட்வீட். சென்னையில் அரசு மருத்துவர்கள் அரசாணை 354-ன் கீழ் 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை 4-ஐ வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து யுடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்க்கத்தில், ‘அரசு மருத்துவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் நடந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு நீதி […]
மின்கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை என்றால், விரைவில் போராட்டம் நடத்தப்படும் என ஜி.கே.வாசன் அறிவிப்பு. தமிழகத்தில், புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஜி.கே.வாசன் அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது […]
தாய்லந்தில் இருந்து மீண்டும் இலங்கை திரும்பிய கோத்தபாய ராஜபக்ஷே. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜூலை 9 அன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் தலைநகரில் உள்ள பல அரச கட்டிடங்களை எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டதை அடுத்து, அவர் உடனடியாக பதவி விலகக் கோரி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை எடுத்து, கோத்தபய ராஜபக்ஷே அவர்கள் கடந்த ஜூலை 13ஆம் தேதி தனது பதவியை துறந்து நாட்டை […]
நேஷனல் ஹெரால்ட் விவகாரத்தில் 3-வது நாளாக, அமலாக்கத்துறை சோனியகாந்தியிடம் நடத்திய விசாரணை நிறைவு. நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நிறுவனத்தின் பங்குகளை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு மாற்றியது தொடர்பாக எழுந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக வழக்கு தொடர்பாட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த இந்த விசாரணை கடந்த வாரம் மீண்டும் தொடர்ந்தது அப்போது அவர் அமலாக்க துறையின் முன் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக நேற்று 6 மணிநேரமாக […]
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதல்வரை கைது செய்த போலீசார். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி, ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரான நிலையில், சோனியா காந்தி கொரோனா தொற்று காரணமாக விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, இன்று விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகியுள்ளார். இந்த நிலையில், சோனியாகாந்தியிடம் […]
அரசு மருத்துவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மனசாட்சியோடு நிறைவேற்றாமல் இழுத்தடித்து ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? என டிடிவி தினகரன் ட்வீட். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தக் கட்ட போராட்டத்தை மேற்கொள்ள இருக்கும் சூழலில், இதனை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தக் கட்ட போராட்டத்தை மேற்கொள்ள […]
நாட்டின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் குரலைக் கேளுங்கள் ராகுல் காந்தி ட்வீட். இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் […]
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் இலங்கை வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன், மின் தட்டுப்பாடும் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இலங்கையில் உள்ள மக்கள் வீதிக்கு வந்து இலங்கை அதிபர் ராஜபக்சே பதவி விலக கோரி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கண்டனம் தெரிவித்து வந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா அவர்கள், […]
அகில இந்திய வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 67% பேருந்துகள் ஓடவில்லை என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. காரணம்: விலைவாசி உயர்வு கட்டுப்பாடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும்,பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ,ஏஐடியூசி,யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மக்கள் அவதி: மேலும்,வங்கி,எல்.ஐ.சி. உள்ளிட்ட […]
டாஸ்மாக் பார் டெண்டர் ஒளிவுமறைவின்றி விடப்பட்டது என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி. அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு வேண்டியவர்களுக்கு மதுபான பார் டெண்டர் விடுவதாகவும், எனவே இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிடக் கோரி பார் உரிமையாளர்கள் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இதுகுறித்து, சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், போராட்டம் நடத்தியவர்கள் விதிமீறல் தொடர்பாக எந்த மனுவும் கொடுக்கவில்லை. தமிழகத்தில் டாஸ்மாக் பார் நடத்த […]